தென்னிந்திய சினிமாவின் ஒரு முக்கியமான இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் கூட்டணி சேரும் மூன்றாவது திரைப்படம் "வெந்து தணிந்தது காடு". இப்படம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி திரையரங்குகளில் மிக பிரமாண்டமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. "விண்ணைத்தாண்டி வருவாயா" மற்றும் "அச்சம் என்பது மடமையடா" திரைப்படங்களுக்கு பிறகு உருவாக்கும் இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் படமாக அமையும் என்பது ரசிகர்களின் கருத்து.



நல்ல வரவேற்பை பெற்ற முதல் பாடல்:


இசை புயல் ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் தான் "மறக்குமா நெஞ்சம்..." என்ற இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்றது. தாமரை வரிகளை எழுத ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் இப்பாடல் காதுகளுக்கு விருந்தாக அமைந்தது. 


 






பிரமாண்டமாக உருவாகி வரும் செட்டப்:
 
"வெந்து தனித்தது காடு" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 2ம் தேதி நடைபெறும் என படக்குழுவினர் அறிவித்த நிலையில் இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்க உள்ளார். பல்லாவரத்தில் அமைந்துள்ள ஐசரி கணேஷின் வேல்ஸ் பல்கலைகழத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்ற அறிவிப்பை ஏற்கனவே படக்குழுவினர் வெளியிட்டனர். 


செட்டின் புகைப்படம் வெளியானது:


அந்த வகையில் தற்போது "வெந்து தணிந்தது காடு" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான பிரமாண்டமான செட்டப் உருவாக்கப்பட்டுள்ளது. அதனுடைய புகைப்படத்தை தற்போது படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். கோடி கணக்கில் செலவு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த இசை வெளியீட்டு விழா சுமார் 6000ற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு அழைப்பு விடப்படவுள்ளது. இதுவரையில் நடைபெற்ற திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு இத்தனை கோடி செலவில் இவ்வளவு பிரமாண்டமாக நடைபெறும் முதல் விழா இதுவாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் வியந்துள்ளார்கள். 


 






ரசிகர்கள் ஆர்வம்:


ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் நிச்சயமாக சூப்பர் ஹிட் பாடல்களாக தான் இருக்கும் என்பதால் அதற்காக மிகவும் ஆவலாக காத்து கொண்டு இருக்கிறார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரை உலகமே திரும்பி பார்க்க வைத்துள்ளது இந்த பிரமாண்டமான செட்டப் என்றால் அது மிகையல்ல.   


செப்டம்பர் 2ல் பல்லவராமே ஒரு கோலாகல கொண்டாட்டத்தில் மிளிர போகிறது.