கொரொனா தொற்றின் பிரச்சினைகள் தற்போது குறைந்திருப்பதோடு, கோடைக் கால விடுமுறைகளும் நம்மிடம் வந்துள்ளன. இந்த சூழலில் மக்கள் சாரை சாரையாக திரையரங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். சமீபத்தில் ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப் 2, பீஸ்ட் ஆகிய திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றி, மக்கள் திரையரங்கங்களை எவ்வளவு நேசிக்கின்றனர் என்பதை நமக்கு உணர்த்துகின்றன. 


நீங்கள் அதிகமாக திரைப்படங்களைப் பார்ப்பவராக இருந்தால், பல்வேறு கிரெடிட் கார்ட் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அளித்து, உங்கள் திரையனுபவத்தை மேலும் சிறப்பானதாக மாற்றுகின்றன. சில குறிப்பிட்ட கிரெடிட் கார்ட் மூலமாக திரைப்பட முன்பதிவுகளை மேற்கொள்ளும் போது, ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொன்று இலவசம், கூடுதல் தள்ளுபடி, கேஷ்பேக் ஆஃபர்கள் முதலான பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. அவற்றின் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். 


Kotak Delight Platinum Credit Card



இந்த கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதன் மூலமாக ஒரே மாதத்தில் உணவு மற்றும் பொழுதுபோக்குக்காக 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்வோருக்கு இதில் டிக்கெட் கட்டணத்தில் சுமார் 10 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மேலும் ஆண்டுக்கு சுமார் 1.25 லட்சம் ரூபாய் செலவு செய்பவர்களுக்கு இலவசமாக 4 பிவிஆர் டிக்கெட்கள் அல்லது 750 ரூபாய் பணம் ஆகியவை கேஷ்பேக் மூலமாக அளிக்கப்படுகிறது. இந்த கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதற்கான ஆண்டுக் கட்டணம் 299 ரூபாய். 


Axis My Zone Credit Card 



பேடிஎம் மூவிஸ் மூலமாக முன்பதிவு செய்யப்படும் இரண்டாவது திரைப்பட டிக்கெட்டில் 100 சதவிகித தள்ளுபடி அளிக்கும் இந்த கிரெடிட் கார்ட் மேலும் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. சோனி லிவ் ஆண்டு சப்ஸ்கிர்ப்ஷன், AJIO தளத்தில் சுமார் 2 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தால் 600 ரூபாய் தள்ளுபடி, இந்தியாவில் பங்குதாரர் உணவகங்களில் 20 சதவிகிதம் வரை தள்ளுபடி என்பதோடு மட்டுமில்லாமல் இந்தியாவுக்குள் குறிப்பிடப்படும் சில விமான நிலையங்களின் லவுஞ்ச்களில் இலவச அனுமதி ஆகியவையும் இதில் கிடைக்கிறது. இந்த கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதற்கான ஆண்டுக் கட்டணம் 500 ரூபாய். 


PVR Kotak Platinum Credit Card 



ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்வோருக்கு இரண்டு திரைப்பட டிக்கெட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றனர். மேலும், பிவிஆர் பாக்ஸ் ஆஃபிஸில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களின் 5 சதவிகித கேஷ்பேக், பிவிஆர் திரையரங்களில் வாங்கப்படும் உணவு, குளிர்பானங்கள் ஆகியவற்றின் செலவில் 15 சதவிகித கேஷ்பேக் ஆகியவை இதில் கிடைக்கும் சலுகைகள். இந்த கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதற்கான ஆண்டுக் கட்டணம் 999 ரூபாய். 



HDFC Bank Platinum Times Credit Card



BookMyShow செயலி மூலமாக முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களில் 25 சதவிகிதம் தள்ளுபடி (சுமார் 350 ரூபாய் வரையிலான தள்ளுபடி) வழங்கும் இந்த கிரெடிட் கார்ட், இதனை வார நாள்களில் உணவகங்களில் 150 ரூபாய் செலுத்த பயன்படுத்தும் போது 10 ரிவார்ட் பாயிண்ட்களையும், பிற செலவுகளில் 150 ரூபாய் பயன்படுத்தினால் 3 ரிவார்ட் பாயிண்ட்களையும் வழங்குகிறது. இந்த கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதற்கான ஆண்டுக் கட்டணம் 1000 ரூபாய். இந்த கிரெடிட் கார்ட் பயன்படுத்து ஆண்டுக்கு சுமார் 2.5 லட்சம் ரூபாய் செலவு செய்பவர்களுக்கு இந்தக் கட்டணமும் தள்ளுபடி செய்யப்படுகிறது. 


SBI Elite Credit Card 



இந்த கிரெடிட் கார்ட் மூலமாக ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சினிமா டிக்கெட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. உணவகம், மளிகை முதலான செலவுகளுக்கு 5 மடங்கு ரிவார்ட் பாயிண்ட்கள், கிளப் விஸ்ட்ஹாரா சில்வர் மெம்பர்ஷிப், சர்வதேச விமான நிலையங்களில் 6 முறையும், உள்நாட்டு விமான நிலையங்களில் 2 முறையும் லவுஞ்ச் பயன்படுத்திம் வசதி ஆகியவற்றை வழங்கும் இந்த கிரெடிட் கார்ட்டைப் பயன்படுத்துவதற்கான ஆண்டுக் கட்டணம் 4999 ரூபாய்.