தமிழ் திரையுலகின் மிகப்பெரிய உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேர். இவர் தமிழ் திரையுலகின் மிகப்பெரிய இயக்குனர் ஆவார். விஜய்யை நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் சந்திரசேகர். விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர்.

ஷோபா சந்திரசேகர்:

ஷோபா சந்திரசேகரை விஜய்யின் தாயாராக நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், பிரபல பின்னணி பாடகி ஆவார். 1967ம் ஆண்டு இரு மலர்கள் என்ற படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் டி.எம்.செளந்தர்ராஜனுடன் இணைந்து மகாராஜா ஒரு மகாராணி என்ற பாடலே இவர் பாடிய முதல் பாடல் ஆகும். இளையராஜா இசையிலும் ஏராளமான பாடல்களை பாடிய இவர் தனது மகன் விஜய்யுடனும் இணைந்தும் பாடியுள்ளார். 

அம்மாவுடன் இணைந்து பாடிய விஜய்:

விஜய் நடிகராக அறிமுகப்படுத்திய எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யின் ஆரம்ப கால படங்களை அவரே இயக்கினார். அப்போது, விஜய்யை வைத்து 1995ம் ஆண்டு விஷ்ணு என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.

தொட்டபெட்டா:

தேவா இசையில் அந்த படத்தில் இடம்பெற்ற தொட்ட பெட்டா ரோட்டு மேல பாடல் தற்போது வரை ரசிகர்களால் மிகவும் விரும்பி கேட்கும் குத்துப்பாடல் ஆகும். விஜய்யின் முதல் பளாக்பஸ்டர் குத்துப்பாடலும் இது என்றே சொல்லலாம். இந்த பாடலை நடிகர் விஜய்யே பாடியிருப்பார். 

அவருடன் இணைந்து இந்த பாடலை அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் பாடியிருப்பார். இவர்கள் இருவரது குரலிலும் இந்த பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. நடிகர் விஜய்யும், அவரது தாய் ஷோபனாவும் இணைந்து பாடிய முதல் பாடல் இந்த பாடலே ஆகும். 

ஒன்ஸ்மோர்:

இந்த படத்திற்கு பிறகு 1997ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படம் ஒன்ஸ்மோர். சிவாஜியுடன் இணைந்து விஜய் இந்த படத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் ஊர்மிளா ஊர்மிளா என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். இந்த பாடலை நடிகர் விஜய் பாடியிருப்பார். அவருடன் இணைந்து அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் பாடியிருப்பார். 

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்து அவரது தாயார் ஷோபாவும் அவரும் இணைந்து பாடியது இந்த இரண்டு பாடல்கள் மட்டுமே ஆகும். இதுதவிர, விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த சிவகாசி படத்தில் இடம்பெற்ற கோடம்பாக்கம் ஏரியா பாடலையும் ஷோபா சந்திரசேகரே பாடியுள்ளார்.

வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற என் உச்சிமண்டையில பாடல் மற்றும் சுறா படத்தில் இடம்பெற்ற நான் நடந்தால் அதிரடி பாடலையும் ஷோபா சந்திரசேகர் பாடியுள்ளார்.