'இரவுக்கு ஆயிரம் கண்கள்' திரைப்படத்தை இயக்கிய மு. மாறன் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஆத்மிகா.மேலும் இப்படத்தில் சதீஷ், பூமிகா, சுபிக்ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் மார்ச் 17ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 


 



செங்கலுடன் வந்த கூல் சுரேஷ்: 



திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்தை பார்ப்பதற்காக திரைப்பட விமர்சகரான கூல் சுரேஷ் திரையரங்குக்கு செங்கலுடன் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு திரைப்படத்திற்கும்  வெவ்வேறு விதமாக ரிலீஸ் நாள் அன்று திரைப்படத்தை விமர்சனம் செய்வதை வாடிக்கையாக கொண்டவர் கூல் சுரேஷ். அவர் கொடுக்கும் விமர்சனம் சோசியல் மீடியாவில் மிகவும் ட்ரெண்டிங்காகும். அந்த வகையில் உதயநிதியின் 'கண்ணை நம்பாதே' படத்திற்கு கூல் சுரேஷ் செங்கலுடன் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 


 



கண்ணை நம்பாதே கெத்து தல :



கூல் சுரேஷ் பேசுகையில் " நம்ம செங்கல் மன்னன் இல்லை இல்லை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தை பார்க்க நான் மட்டும் வரவில்லை என்னுடைய நண்பர் உங்களுடைய நண்பர் செங்கலுடன் படம் பார்த்து ரசிப்பதற்காக வந்துள்ளேன். அனைவருக்கும் செங்கல் நல்வாழ்த்துக்கள். இயக்குனர் மாறன், ஹீரோ உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் ரஞ்சித் குமார் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உதயநிதி சார் உங்களுக்கு ஒன்னு சொல்ல ஆசை படுகிறேன்.


என்னால் இந்த  செங்கலை கொஞ்ச நேரம் கூட தூக்கிவைத்துக்கொண்டு பேசமுடியவில்லை. நீங்கள் எப்படி தான் ஆறு மாதமாக செங்கலை வைத்து கொண்டு பிரச்சாரம் செய்தீர்கள் என எனக்கு தெரியவில்லை. அவ்வளவு வெயிட்டாக இருக்கிறது. உங்களின் மனசு மட்டும் வலிமையாக இல்லை உங்களை கைகளும் வலிமையாக இருக்கிறது. அதே போல கண்ணை நம்பாதே திரைப்படமும் நிச்சயம் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். STRக்கு பத்து தல... கண்ணை நம்பாதே கெத்து தல! " என பேசிய கூல் சுரேஷ் படத்தை பார்த்து விட்டு வந்து உங்களை சந்திக்கிறேன் என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.