வெந்துதணிந்தது காடு... எனத் தொடங்கி பார்க்கிற படத்திற்கெல்லாம் வணக்கத்தை போட்டு வந்த கூல் சுரேஷ், வெந்துதணிந்தது காடு படம் வெளியான பின் என்ன சொல்வார் என்று ஒரு தரப்பு எதிர்பார்த்திருந்தது. வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகம் வரும் என்பதால், இரண்டாம் பாகத்தை வைத்து தன் பாணியை கூல் சுரேஷ் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கூல் சுரேஷிற்கு ஒரு ஆப்பிள் போன் வழங்கியதுடன், அவரது குழந்தைகளின் கல்வி செலவையும் கவனிப்பதாக கூறி, கூல் சுரேஷிற்கு அதிர்ச்சி அளித்தார்.
இந்நிலையில், இன்று வெளியான சிவகார்த்திகேயனின் ‛ப்ரின்ஸ்’ படத்தை பார்க்க வந்த கூல் சுரேஷ், தனது வழக்கமான வெந்து தணிந்தது காடு எனத் தொடங்கும் வசனத்தை மாற்றுவதாக அறிவித்தார். இதோ அந்த பேட்டி....
‛‛இத்தனை நாள், ‛வெந்து தணிந்தது காடு...’ எனக்கூறிக் கொண்டிருந்தேன். படம் ரிலீஸ் ஆகிவிட்டது. இனி என்னசொல்லப் போகிறேன் என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த நாள் இன்று தான் வந்துள்ளது. இனி நான் என்ன சொல்வேன் என்றால்,
’எஸ்.டி.ஆர்.,யின் பத்து தல... சிம்புனா கெத்து தல...’
எஸ்.டி.ஆர்.,யின் பத்து தல... ப்ரின்ஸூன கெத்து தல.... இந்த ப்ரின்ஸ் படம், மெஜேன் ஒன்னும் பெருசா இல்லை. படத்தை பார்த்துவிட்டு நல்லா சிரித்துவிட்டு போகலாம். இந்த படத்தில் நடித்துல்ல அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, ஆனந்த்ராஜ் சார் வரும் 10 நிமிடங்கள், படம் பிரமாதமாக இருக்கு. ஆனந்த்ராஜ் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அதுமட்டுமல்ல, சிவகார்த்திகேயன் பற்றி, என் மச்சான் சிவகார்த்திகேயன் பற்றி, தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச்செழியன் கூறியிருந்தார், ‛ரஜினி, விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயன் என்று’ கூறியிருந்தார். மிஸ்டர் அன்புச் செழியன் சார்... ரஜினிக்கு அப்புறம், விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயன் தான் என்று எதை வைத்து சொன்னீர்கள் மிஸ்டர் அன்புச் செழியன் சார்...? எதை வெச்சு சொன்னீங்க, எப்படி சொன்னீங்க? ஆனால், நீங்கள் சொன்னது, உண்மைதான். ரஜினிக்கு அப்புறம், விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயன் செம்ம மாஸா இருக்காரு . அன்புச்செழியன் சார், நீங்க சொன்னது நடந்து விட்டது. என் மச்சான் சிவகார்த்திகேயன் ஜெயிச்சுட்டான்.
‛எஸ்.டி.ஆர்.,யின் பத்து தல... ப்ரின்ஸூன கெத்து தல’. ப்ரின்ஸ் படம் அருமையா இருக்கும். இந்த சிவகார்த்திகேயன் படம் பார்க்க டிக்கெட் வாங்கி வர்றீங்களோ, கட்டவுட், போஸ்டர் பார்க்கவே வர்றாங்க. அந்த அளவிற்கு ரசிகர்கள் பேனர்கள் வைத்துள்ளார்கள். இனிமேல் பத்து தலைக்கு தான் ப்ரமோஷன் பண்ணப் போறேன். படத்தை பாருங்க, எஞ்ஜாய் பண்ணுங்க,’’
என்று செய்தியாளர்களிடம் கூல் சுரேஷ் பேசினார்.