குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நிகழ்ச்சியின் மூன்று ஃபைனலிஸ்ட்கள் யார் யார் என்றத் தகவல் வெளியாகி உள்ளது.


விளையாட்டாக ஒரு குக்கிங் ஷோ


ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பிக் பாஸ் நிகழ்ச்சிகளின் வரிசையில் விஜய் டிவியின் சமீபத்திய ஹிட் ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. பிற சேனல்கள் சீரியசான குக்கிங் ஷோக்களை காரசாரமாக நடத்தி வந்த நிலையில், விளையாட்டாகத் தொடங்கி ரேட்டிங்கையும் அப்ளாசையும் அப்படியே மக்கள் மனதையும் வென்றுள்ளது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி.


சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப்பார்க்கும் இந்த நிகழ்ச்சி சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகியவை பெரும் ஹிட் அடிக்க, சீசன் 3 தொடங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது.


விவாதத்தைக் கிளப்பிய வெங்கடேஷ் பட்




எனினும் குக்கு வித் நிகழ்ச்சி பார்த்து நீண்ட நாள்களாக குழந்தை இல்லாமல் போராடி வந்த ஒரு பெண் கவலை மறந்து குழந்தை பெற்றதாக செஃப் வெங்கடேஷ் பட் கூறியது இணையவெளியில் பெரும் விவாதங்களைக் கிளப்பி பல எதிர்மறைக் கருத்துகளைப் பெற்றது.


எனினும் இவற்றையெல்லாம் தாண்டி டிஆர்பி ரேட்டிங்கில் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபோட்டு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.


இறுதிக்கட்டம்




கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் என 10 பிரபலங்கள், ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோருடம் புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், ஷீத்தல், அருண், மூக்குத்தி முருகன் ஆகியோருடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது.


 






வரும் வாரம் ஒளிபரப்பப்படும் அரை இறுதிச் சுற்றை எதிர்பார்த்து நிகழ்ச்சி ரசிகர்கள் காத்துள்ள நிலையில், தர்ஷன், அம்மு அபிராமி, வித்யுலேகா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.