பாலி தீவில் விடுமுறையை கொண்டாடி வரும் நடிகை வித்யுலேகா நீருக்கடியில் பிகினியில் செல்லும் வீடியோவை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் மூலம் வித்யுலேகா  நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு பல தமிழ் படங்களில் நடித்தார். இவர் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் போட்டியாளராக இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.


வித்யுலேகா மூத்த தமிழ் நடிகர் மோகன் ராமனின் மகள் ஆவார். அவர் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் வித்யுலேகா,  சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருப்பார். அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோஷூட்களில் இருந்து படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுகிறார். இவரது பதிவுகள் அடிக்கடி வைரலாகி வருகிறது.


சமீபத்தில், வித்யுலேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் கையில் கோப்பையுடன் பிகினியில் தண்ணீருக்கு அடியில் செல்வதைப் காணலாம். தற்போது இந்தோனேசியாவின் பாலி தீவில் விடுமுறையை அனுபவித்து வருகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


வீடியோ


 






 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண