விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த  நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் கடந்த மே 4 ஆம் தேதி தொடங்கியது. ரக்‌ஷன் இந்த சீசனில் மறுபடியும் தொகுப்பாளராக வந்துள்ளார். செஃப் தாமு , மாதம்பட்டி ரங்கராஜ் , மற்றும் கெளசிக் ஷங்கர் ஆகிய மூவர் நடுவராக உள்ளனர். புகழ் , ராமர் போன்ற மக்களின் மனம் கவர்ந்த கோமாளிகள் இந்த சீசனிலும் தொடர்கிறார்கள். மறுபக்கம் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் , ராஜூ ஜெயமோகன் , பிரியா ராமன்  உள்ளிட்ட 10 போட்டியாளர்கள் இந்த சீசனில் கலந்துகொண்டார்கள். குக்கு வித் கோமாளியின் இந்த வார எபிசோடில்  லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனை வைத்து  நடிகர் ராஜூ ஜெயமோகன் கலாய்த்துள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது

Continues below advertisement

அசைவம் சமைக்க மாட்டேன் என்ற லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்

இந்த சீசனில் நடிகை மற்றும் இயக்குநரான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் அடிக்கடி பேசுபொருளாகி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தான் கமலை முதல் முறையாக சந்தித்த போது அவரிடம் தனது காதலை சொன்னதாகவும் கமல் தன்னை சகோதரி போல் இருப்பதாக பதிலளித்ததாகவும் அவர் பகிர்ந்துகொண்டார். அவர் இப்படி கூறியது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியது. அதேபோல் அசைவம் உணவு சுற்றில் தான் அசைவம் சமைக்கமாட்டேன் என விடாப்பிடியாக லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் சொன்னது பேசுபொருளானது. போட்டி என்று வந்துவிட்டு அசைவம் சமைக்க மாட்டேன் என்கிற அவரது நிலைப்பாட்டை பலர் விமர்சித்தனர். 

Continues below advertisement

இந்த வார குக்கு வித் கோமாளியில்  ராஜூ ஜெயமோகன் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனை கேலி செய்துள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் ' I am Sentimentally against cooking non veg' என்று சொன்னதுபோல ராஜூ 'I am Sentimentally against cooking veg' என்று சொல்லி கலாய்த்துள்ளார். ராஜூவின் இந்த செயல் பலரது கவனத்தை பெற்று வருகிறது.