ராட்சசன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அம்மு அபிராமி. அந்த படத்தில் விஷ்ணு விஷாலின் அக்கா மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதன்பிறகு, அசுரன் படத்தின் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தனது சினிமா கேரியரில் அடுத்தக்கட்டத்திற்கு சென்றார். அதனைத்தொடர்ந்து, கார்த்தியின் தம்பி, மணிரத்னம் தயாரிப்பில் உருவாகிய நவரசா படங்களில் நடித்தார். தற்போது, ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை படத்தில் நடித்து வருகிறார். 


மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 3 யில் ஒரு போட்டியாளராகவும் அம்மு அபிராமி பங்கேற்றுள்ளார். இதன்பிறகு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் தொடர்ந்து அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தநிலையில், நேற்று அம்மு அபிராமிக்கு பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 






இதையடுத்து, கோவிலுக்கு சென்ற அபிராமி தனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "எல்லாருக்கும் வணக்கம், என் பிறந்தநாள் அதுவுமா அவ்வளவு பேர் வாழ்த்து அனுப்பி இருந்தீங்க. எல்லாருக்கும் நன்றி. ரொம்ப சந்தோசமா இருக்கு. 


எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. கண்டிப்பா என்மேல நீங்க வச்ச நம்பிக்கையை நான் காப்பாத்துவேன். என் பிறந்தநாள் தவிர நான் நடிக்குற படத்துக்கு, குக் வித் கோமாளி எல்லாத்துக்கும் உண்மையான அன்பு கொடுக்குறீங்க. முடிஞ்சா அளவுக்கு உங்க எல்லாத்துக்கு மெசஜ் பண்றேன்" என்று பதிவிட்டுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண