சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி மூலமாக அனைவர் மனதையும் ஈர்த்தவர் ஷிவாங்கி . அனைவரும் தங்கள் வீடு செல்ல பிள்ளையாக அவரை கொண்டாடுகிறார்கள் . சூப்பர் சிங்கர் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகம் ஆனவர் ஷிவாங்கி, அந்த சீசனில் வெற்றிபெறாத நிலையில் மீண்டும் குக் வித் கோமாளி சீசன் 1-இல் அறிமுகமானார் . சீசன் 1 வெற்றிக்கு பிறகு சீசன் 2 குக் வித் கோமாலியிலும் பங்கு கொண்டார் .
இந்நிலையில் , சீசன் 2 எதிர் பார்த்ததை விட பெரிய ஹிட் ஆனது. மிகவும் கலகலப்பாக இந்த சீசன் நிறைவும் பெற்றது. அஸ்வின் ஷிவாங்கி ஜோடி மற்றும் ஷிவாங்கி புகழ் காம்போ அனைவராலும் ரசிக்கப்பட்ட காம்போ . இணையத்திலும் அண்ணா தங்கை என்று ஷிவாங்கி புகழ் ட்ரெண்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
சீசன் 2 முடிவதற்கு முன்னவே அனைவர் மனதிலும் இடம் பிடித்த ஷிவாங்கி, சிவகார்த்திகேயன் நடிக்கும் "டான் " படத்தில் இணைந்தார். சிபி சக்கரவர்த்தி இந்தப் படத்தை இயக்குகிறார்,கல்லூரி காதல், காமெடி சார்ந்த படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
படப்பிடிப்பு 50 சதவிகிதம் முடிந்த நிலையில், ஷிவாங்கியின் அடுத்த பயணமாக தற்பொழுது அருண்ராஜா காமராஜ் இயக்கும் ஆர்டிக்கிள் 15 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார் சாதி பிரச்சினைகள் உள்ள கிராமப்புறத்திற்கு அனுப்பப்படும் உயர் பதவியில் உள்ள போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் உதயநிதி நடிக்கவுள்ளார்.