விஜய் டியிவின் ஒளிப்பரப்பாகும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ்,“ தான் 5 ஆண்டு காதலித்து வந்தாகவும், இந்தாண்டிற்குள் தங்களுடைய திருமணம்“ நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரின் stress buster ஆகவும், மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த ஷோ தான் குக் வித் கோமாளி. மற்ற குக்கிங் நிகழ்ச்சிகளை விட வித்தியாசமாக கோமாளிகளும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை, புகழ், சிவாங்கி, பாலா, சுனிதா போன்ற பல கோமாளிகள் கலந்துக்கொண்டனர். குறிப்பாக மற்ற கோமாளிகளை விட மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் புகழ். இந்நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தாலும் இந்த நிகழ்ச்சி மட்டுமே புகழுக்கு ஏராளமாக ரசிகர்களைப்பெற்று தந்துள்ளது.
இப்படி முதல் சீசன், இரண்டாவது சீசன் என இவரின் லூட்டிகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது. இதனையடுத்து புகழுக்கு பல சினிமா வாய்ப்புகள் கிடைத்த நிலையில், இந்த சீசன் 3ல் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதுவே ரசிகர்கள் பலருக்கு வருத்தமாக இருந்த நிலையில், சீசன் 3 ல் புகழ் வரவேண்டும் என்ற கருத்துக்களை ரசிகர்கள் முன் வைத்தனர். இதனையடுத்து மீண்டும் குக் வித் கோமாளியில் ரீ என்ட்ரி கொடுத்தார் புகழ்.
புகழ் அவருடைய காதலியுடன் இருக்கும் போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் தான், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலிப்பற்றி ரகசியங்களை போட்டு உடைத்துள்ளார். இதோடு பென்ஸி என்பவரை விஜய் டிவிக்கு வருவதற்கு முன்பிருந்தே தெரியும் எனவும், 5 ஆண்டுகளாக காலித்து வருவதாகவும் கூறினார். மேலும் அவர் தனக்கு பக்கபலமாக இருந்துள்ளார் எனவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், பவித்ரா, தர்ஷாவுடன் புகழ் மேற்கொண்ட காதல் அட்டகாசங்களைப்பற்றியெல்லாம் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என கூறியதையடுத்து போட்டியாளர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனையடுத்து நடுவர்கள் வெங்கட் பட் மற்றும் தாமு எப்போது திருமணம் என்று கேட்க, எப்படியும் இந்த ஆண்டிற்குள் திருமணம் முடித்துவிடுவேன் என்று முடித்து விடுவேன் என்று புகழ் பதிலளித்தது ரசிகர்களையும் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. புகழின் இந்த திருமண அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியதோடு, பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தன்னுடைய திருமண அறிவிப்பை மக்களிடம் வெளிப்படுத்தியதால், மற்ற சீசன்களைப்போன்று எந்த லூட்டிகளையும் சீசன் 3 ல் புகழால் மேற்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.