விஜய் டிவியில் கடந்த மூன்று சீசன்களாக மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் கோமாளிகளும் அவர்கள் அடிக்கும் லூட்டிகளும் தான்.
அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இன்று மிகவும் பிரபலமான ஒரு கோமாளி புகழ். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் ஏராளமான திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தனது காமெடியாலும் வித்தியாசமான எக்ஸ்ப்ரஷன்களாலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தனக்கென ஒரு தனி ஸ்டைலை பாலோ செய்பவர். ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு வித்தியாசமான தோற்றத்தில் வந்து பார்வையாளர்களையும் போட்டியாளர்களை அசத்தும் புகழ் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு சர்ப்ரைஸ் தோற்றத்தில் வந்து அசத்தினார்.
சர்ப்ரைஸ் கொடுத்த புகழ் :
கன்னட மொழியில் உருவாகி மாபெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி பாராட்டுகளையும் வசூலையும் குவித்த திரைப்படம் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா'. இப்படத்தில் வரும் பஞ்சுருளி தெய்வம் போன்ற தோற்றத்தில் சர்ப்ரைஸாக குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்திறங்கினார் புகழ். அங்கிருந்த அனைவருக்கும் மட்டுமின்றி பார்வையாளர்களும் இதை மிகவும் ரசித்தனர்.
காந்தாராவின் வெற்றிக்கு காரணம் :
இது குறித்து புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட இருந்தார். அதில் இந்த மேக் அப் போட சுமார் 4 மணி நேரமானது. காந்தாரா திரைப்படம் மாபெரும் வெற்றியடைய முக்கியமான காரணமாக அமைந்ததற்கு பல காரணங்கள் இருந்தும் அதில் மிக முக்கியமானது அப்படத்தில் இருந்த வேலைப்பாடுகள். அதை தத்ரூபமாக மேக் அப் செய்த மேக் அப் மேனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். ரிஷப் ஷெட்டியின் தனது சிறப்பான நடிப்பின் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார். அதில் ஒரு சிறு துளியை நான் இந்த கெட்டப் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளேன் என நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என் உயர் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டு வீடியோவையும் பகிர்ந்து இருந்தார்.
புகழின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றாலும் ஒரு சிலரோ பஞ்சுருளி தெய்வத்தை போல பலரும் வேடமிட்டு வருகிறார்கள். இது கர்நாடக மக்களின் தெய்வ வழிபாட்டையும், சென்டிமென்டையும் கேலி செய்வது போல உள்ளது. அதனால் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என ஒரு சிலர் தங்களின் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.