விஜய் டிவியின் மிகவும் அபிமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சி காந்த நான்கு சீசன்களாக ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. 



சிறப்பான கோமாளி :


கடந்த நான்கு சீசன்களாக மிகவும் சிறப்பான ஒரு கோமாளியாக திகழ்ந்தவர் மணிமேகலை. தனக்கென ஒரு தனி ஸ்டைல் கோமாளியாக கலக்கிய மணிமேகலை சென்ற வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்  பங்கேற்றதுதான் கடைசி வாரம். இதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரிவித்து இருந்தார். அந்த பதிவில் கடந்த 2019ம் ஆண்டு முதல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இன்று வரை ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து இருந்தார். 


வதந்திகளுக்கு முற்றிப்புள்ளி :


மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய காரணம் தெரியாமல் அவரின் ரசிகர்கள் தவித்து வந்த நிலையில் தனது சொந்த ஊரில் நிலம் ஒன்றை வாங்கி அந்த நிலத்தில் உழும் புகைப்படங்களை சமீபத்தில் போஸ்ட் செய்து இருந்தனர். அது குறித்தும் பல வதந்திகள் எழுந்தன. அதற்கு பதில் அளிக்கும் வகையில் தற்போது மணிமேகலை புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுட்டு பதிலளித்துள்ளார்.


மணிமேகலை ஹுசைன் குட்டி மாளிகை :


அதனை தொடர்ந்து மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக ஒரு போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது புதிய வீட்டின் பூமி பூஜை செய்யும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். ஹுசைன் மற்றும் மணிமேகலை அவர்களின் பண்ணை வீட்டின் பாலக்கால் பூஜை நடத்தியுள்ளனர். கடவுளின் அருளாலும் கடினமான உழைப்பாலும் எங்களின் குட்டி மாளிகையை உருவாக்குகிறோம். எப்போதெல்லாம் கிராமத்திற்கு வருகிறோமா அங்கு எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான இடம் இருக்கும். உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் எங்களுக்கு தேவை. கனவு காணுங்கள் அதை செயல்படுத்துங்கள்!!! என பதிவிட்டுள்ளார். மணிமேகலை - ஹுசைன் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அவர்களின் இந்த போஸ்ட் சோசியல் மீடியாவில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.