சின்னத்திரை நடிகை வெளிநாட்டில் தனது கணவரை மிஸ் செய்வதால், அவரது உருவத்தை பொம்மையாக செய்து தனக்கு தானே பரிசாக கொடுத்துள்ளார். 


தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் மணிமேகலை. நேரலை தொகுப்பாளராக இருந்த இவர், குக் வித் கோமாளி மூலம் பிரபலமானார். குக் வித் கோமாளியின் 4வது சீசனில் இருந்து வெளியேறிய மணிமேகலை, மீண்டும் தொகுப்பாளினியாக வந்து ஷாக் கொடுத்தார். தனது பேச்சு மூலம் தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகி கொண்ட மணிமேகலை, நடன கலைஞரான உசேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் எதிர்ப்பை மீறி வெவ்வேறு மதத்தை சேர்ந்த இருவரும் திருமணம் செய்து கொண்டதால், சர்ச்சைகள் எழுந்தன.


லவ் ஜிகாத் திருமணம் என்ற வதந்திகளுக்கும் தனது அதிரடி பதிலால், மணிமேகலை முற்றுப்புள்ளி வைத்திருந்தார். திருமணத்துக்கு பிறகு சின்னத்திரையில் கலக்கி வரும் மணிமேகலை, கணவருடன் சேர்ந்து யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இதனால் மணிமேகலை - உசேன் ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.


இந்த நிலையில், அண்மையில் அமெரிக்கா சென்றுள்ள மணிமேகலை சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு ஆக்டிவாக உள்ளார். எப்பொழுதும் கணவருடன் செல்லும் மணிமேகலை தனியாக சென்றுள்ளதால், கணவரை ரொம்ப மிஸ் செய்கிறாராம். அதற்காக அவர் செய்த ஒரு செயல் ரசிகர்களை ஆச்சர்ய பட வைத்துள்ளது. அமெரிக்காவின் சாலையோர கலைஞரிடம் தனது கணவர் புகைப்படத்தை காட்டி, அவரது உருவத்தை பொம்மையாக வடிவமைத்துள்ளார். 


இது குறித்து பதிவிட்ட மணிமேகலை, அமெரிக்கா டூ ஆண்டிப்பட்டி என்றும், உசேனின் சிரிப்பை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். அதனால், உசேனின் உருவபொம்மையை செய்து தனக்கு தானே பரிசளித்து கொண்டதாகவும், வெளிநாடு சென்றாலும், கூடவே வைத்து தொந்தரவு செய்வதாகவும் பகிர்ந்துள்ளார். கணவர் மீதான காதலை வெளிப்படுத்தும் விதமாக மணிமேகலை செய்த இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.