விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலமாக வெளியுலகத்திற்கு பிரபலமானவர் தான் செஃப் தாமு. குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பத்ம விருதில் இவருக்கும் பத்ம பூஷன் விருது வழங்கி மத்திய அரசு அவரை கௌரவித்துள்ளது.
நாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மொத்தமாக 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கபட்டுள்ளது. அதே போல் நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான செஃப் தாமு என்கிற தாமோதரனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் டிவி நிகழ்ச்சிகளில் குறிப்பாக சமையல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார். அதுவும் விஜய் டிவியில் கடந்த 5 வருடமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பிரபலமானவர் தான் செஃப் தாமு. இந்த நிகழ்ச்சியில் சமையல் திறமையை மட்டும் சிறந்த சிறந்த என்டர்டெயினர் எனபதையும் தாமு நிரூபித்து வருகிறார்.