தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அட்லி இருந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவர் அறிமுகமானார். அதன் பின்பு நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றிப்படங்களை இயக்கினார். தற்போது ஷாருக்கானை வைத்து அட்லீ ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில், இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. சமீபத்தில் சூப்பர் ஹிட்டை ருசிக்காத ஷாருக் அட்லியின் ஜவான் படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதேபோல் ஷாருக்கின் ரசிகர்களும் இப்படத்துக்காக காத்திருக்கின்றனர்
ஜவான் படத்தின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு:
ஜவான் படத்தின் படபிடிப்பு தொட்ங்கிய நாளிலிருந்து, படத்தின் கதையைப் பற்றியும், இயக்குனர் அட்லியைப் பற்றியும் பலவாறாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதற்கு முன்னதாக, விஜயின் பல படங்களின் கதைதான் ஜவான் என தகவல் பரவியது. அதே போல, கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சர்தார்’ படத்தின் ஸ்டோரி லைனும் ஜவான் படத்தின் கதையும் ஒன்றுதான் எனவும் பரவலாக பேசப்பட்டது. இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அந்த இரண்டு படங்களுக்கு எடிட்டிங் பணிகளை மேற்கொள்ளும் எடிட்டர் ரூபன் விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தில் வதந்திக்கு கண்டனத்தை பதிவு செய்வதாக கூறியிருந்த அவர், இரண்டு படங்களின் கதையும் ஒன்று இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து, அந்த தகவல்கள் பொய் என நிரூபனம் ஆனது.
விஜய்காந்தின் பேரரசு படமா ஜவான்?
இயக்குனர் அட்லி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
இந்த நிலையில், ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் கதை, 2006-ம் ஆண்டு விஜயகாந்த் நடித்து வெளியான பேரரசு படத்தின் கதை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அட்லி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவும் முன்னர் பரவியது போன்ற பொய்யான தகவலா, அல்லது நிஜமாகவே இது பேரரசு படத்தின் கதைத்தானா என்பது பொருத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.