பிரபல காமெடி நடிகர் சேஷூ(60) காலமானார்.மாரடைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக அவர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


சின்னத்திரையில் ஒளிபரப்பான பிரபல காமெடி நிகழ்ச்சியான லொள்ளு சபா மூலம் பிரமலமானவர் சேஷு. இதையடுத்து அவர் பெரிய திரையிலும் அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் 2002 -ஆம் ஆண்டு தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.சந்தானம் நடித்த  டிக்கிலோனா, ஏ1, பாரிஸ் ஜெயராஜ்,உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், வேலாயுதம், உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார்.  


இருபத்தைந்துக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள சேஷூ, கொரோனா சமயத்தில் ஓடிப்போய் பலருக்கும் உதவினார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, நிகழ்ச்சியில் நடிகர்கள் சேஷூ சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் சுவாமிநாதன், சேஷூ பல ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கொரோனா காலத்தில் பலருக்கும் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. 


சேஷூ கடந்த மார்ச் 15-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இவரின் ஏராளமான ரசிகர்கள் இவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். சேஷூ விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரின் நண்பர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்நிலையில் நடிகர் சேஷூ இன்று காலமானார். 


மேலும் படிக்க 


Goat Update: "அநியாயம் பண்ணாதீங்க அப்டேட் வரும்" அன்புத் தொல்லை செய்யும் ரசிகர்களுக்கு வெங்கட்பிரபு வேண்டுகோள்!


Actor Kishore: "தலையில் குடுமி இருந்தால் மட்டும் அவர் நல்லவன் இல்லை" டி.எம் கிருஷ்ணாவுக்கு நடிகர் கிஷோர் ஆதரவு