Goundamani: தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று தேவர் மகன். அப்படிப்பட்ட படத்தையே ஒருவர் நகைச்சுவையாக கலாய்த்து உள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், இதை செய்தவர் நகைச்சுவை மன்னன் கவுண்டமணி தான். அதுவும் நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் முன்னரே கவுண்டர் கொடுத்து கவண்டமணி கலாய்த்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தேவர் மகன் திரைப்படம்:
தமிழ் சினிமாவில் ஒரு சேர ஒருபடம் நல்ல வரவேற்பையும் அதே நேரம் கடும் விமர்சனங்களையும் பெற்றது என்றால் அது தேவர்மகன் தான். சில சிலர் இந்த படத்தை கொண்டாடி தீர்க்க சில இந்த படம் ஒரு சாதிய பெருமை பேசும் படம் என்று எதிர்ப்பும் தெரிவித்தனர். கடந்த 1992 ஆம் ஆண்டு கமல் எழுத்தில் பரதன் இயக்கத்தில் உருவான படம் தான் தேவர் மகன். இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல் ஹாசன், கெளதமி, ரேவதி, நாசர், வடிவேலு ஆகியோர் நடித்து இருப்பார்கள். இசைஞானி இளையராஜா இசையில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருப்பார். இந்த படம் தேசிய விருதுகளையும் பெற்றது.
கலாய்த்த கவுண்டமணி:
இச்சூழலில் தான் தேவர் மகன் படம் திரையிடப்பட்ட நேரத்தில் சிவாஜி கணேசனுக்கும், கவுண்டமணிக்கும் இடையே நடைபெற்ற விவாதம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தேவர் மகன் திரைப்படத்தின் ஸ்பெசல் காட்சியை சிவாஜி நடிகர்கள் மற்றும் நடைகைகளுக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார். படத்தை பார்த்தவர்கள் எல்லோரும் படம் ஆகா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். ஆனால், படத்தை பார்த்த நடிகர் கவுண்டமணி மட்டும் சிவாஜிக்கு தெரியாமல் நழுவிச் சென்றுள்ளார்.
என்னடா இது படத்தை பார்த்த எல்லோரும் நல்லா இருக்கு இல்ல என தங்கள் மனசுல பட்டத சொல்லிட்டாங்க ஆனால் கவுண்டமணி மட்டும் ஒன்னும் சொல்லாம போயிட்டாரு என்று நினைத்து மறு நாள் கவுண்டமணியை தொடர்பு கொண்டு நேரடியாகவீட்டிற்கு வரவழைத்து படத்தை பார்த்துவிட்டு ஒன்னுமே சொல்லாம போயிட்டியே என்று கேட்க உடனே கவுண்டமணி அய்யா நீங்க படத்துல பெரிய தேவர். நீங்க நடந்தா ஊரே நடக்குது. நீங்க வந்தா உங்களுக்கு அவ்வளவு மரியாதை. அப்படி அவ்வளவு பெரிய ஆளா படத்துல வரீங்க.
ஆனா ஒன்னு இவ்ளோ பெரிய மனுஷன் நீங்க. ஒரு சின்ன புள்ள மிதிச்சதுல செத்து போயிட்டீங்களே.இதைத் தாண்டி படத்துல சொல்ல ஒன்னும் இல்லை என ஒரே போடாக போட்டிருக்கிறார். இதனை எதிர்பார்க்காத சிவாஜிக்கும் பெரும் அதிர்ச்சியாம். அடப்பாவி எவ்வளவு முக்கியமான சீன் அது அத இப்படி ஒரே வார்த்தையில கலாய்ச்சி விட்டுட்டியே என்று நினைத்தாரம்.