இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர்.சியின் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இயக்குனராக மட்டுமின்றி ஹீரோவாகவும் பல வெற்றி படங்களில் நடித்த சுந்தர். சி இயக்கத்தில் வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் "காஃபி வித் காதல்" திரைப்படம். ஒரு முக்கோணமாக காதல் கதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
குஷ்புவின் 'அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்துடன் இணைந்து 'பென்ஸ் மீடியா நிறுவனம்' தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா, ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் பிரதாப் போத்தன், யோகி பாபு மற்றும் சின்னத்திரை பிரபலம் டிடியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது யுவனின் இசை.
ரீமிக்ஸ் செய்துள்ள யுவன் :
உலக நாயகன் கமல்ஹாசனின் மிகவும் பிரபலமான பாடலான "ரம் பம் பம்..."பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார் யுவன் சாணார் ராஜா. இந்த பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. பழைய பிரபலமான பாடல்களை ரீமிக்ஸ் செய்வது தான் இன்றைய ட்ரெண்ட். அது நன்றாக ஒர்க் அவுட் ஆகுது. அந்த வகையில் இந்த பாடலும் சூப்பர் ஹிட் பாடலாகும்.
மீண்டும் அதே கூட்டணி :
ஜீவா - ஜெய் கூட்டணியை வைத்து ஏற்கனவே சுந்தர்.சி "கலகலப்பு 2 " படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அரண்மனை 3 படத்தை இயக்கிய சுந்தர். சி சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தை இயக்கியுள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
அக்டோபர் 7ம் தேதி " காஃபி வித் காதல்" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பை தொடர்ந்து இன்று படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலர் முழுவதும் காதலை அள்ளித் தெளித்துள்ளார் இயக்குனர் சுந்தர். சி. யார் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்பது தான் சஸ்பென்ஸ். படக்குழுவினருடன் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான ஸ்வாரஸ்யமான தகவல்கள் பரிமாறப்பட்டன.