இயக்குநர் சுந்தர். சி டைரக்‌ஷினில் வெளியாகவிருக்கும் காஃபி வித் காதல் திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிளாக “தியாகி பாய்ஸ்” பாடல் வெளியாகிவுள்ளது. இதற்கு முன்னர் ரம் பம் பம், சைல்ட் கர்ள் ஆகிய இரண்டு பாடல்கள் வெளியானது.







புதிதாக வெளியாகி இருக்கும் இப்பாடலை, யுவன் சங்கர் ராஜாவும் ஹிப்ஹாப் ஆதியும் சேர்ந்து இப்பாடலை பாடியுள்ளனர். இதற்கு முன்னதாக இருவரும் அன்பறிவு படத்தில் இடம்பெற்ற ”அரக்கியே” எனும் பாடலை இருவரும் சேர்ந்து பாடினர். காஃபி வித் காதல் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாளவிகா ஷர்மா, அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, திவ்ய தர்ஷினி, சம்யுக்தா சண்முகம், ரெட்டின் கிங்ஸ்லி என பல நட்சத்திர பட்டாளத்தையே இறக்கியுள்ளார் சுந்தர் சி.






வழக்கமாக காமெடி படங்களை இயக்கி ஆடியன்சை குதுகள படுத்தும் சுந்தர் சி, இம்முறையும் ரொமாண்டிக் காமெடி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை குஷ்பு சுந்தர் தயாரித்துள்ளார்.காலப்போக்கில் படத்திற்கு ஒரு சூப் சாங் இடம்பெறுவது டெம்ப்லேட் ஆகிவிட்டது. அதேபோல், காஃபி வித் காதலில் இடம்பெற்ற “தியாகி பாய்ஸ்” பாடலும், ஆண்கள் காதல் தோல்வி அடைந்த பிறகு  பாடும் சோக பாடலை ராப் ஸ்டைலில் அமைத்து வெளியிட்டுள்ளனர். பாத்த புடிக்காது பாக்க பாக்கதான் புடிக்கும் என்ற டைலாக் போல, சில பாடல் முதலில் கேட்டால் புடிக்காது கேட்க கேட்கதான் புடிக்கும். இப்பாடலும் இப்போது கேட்க கொஞ்சம் சுமாராகவுள்ளது. 


 



தியாகி பாய்ஸ் எனும் இப்பாடல், யுவனின் யுடியூப் சேனலில் (U1 Records) வெளியாகியது என்பது குறிப்பிடதக்கது.இப்படத்தை காண பல சிங்கிள் பாய்ஸ், ஃபேமிலி ஆடியன்ஸ் காத்து இருக்கின்றனர். கலகலப்பு, அரண்மனை போல இப்படமும் காமெடி தியேட்டரை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் என்பது உறுதி. இப்படத்தில் பல ஹீரோயின்கள் நடிப்பதால் க்ளாமர் சேர்ந்த காமெடி படமாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.