கர்நாடக மாநிலத்தில் உருவாகும் தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணையில் தேக்கப்படும் தண்ணீரின் மொத்த கொள்ளளவு 7 ஆயிரத்து 321 மில்லியன் கனஅடி. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் தமிழக எல்லையில் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் இருந்து கிருஷ்ணகிரி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி தென் பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.


 




 


கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், சாத்தனூர் அணைக்கு சாத்தனூர் அனைக்கு வினாடிகு 4237 கன அடி வீதம் வந்து வந்து கொண்டிருக்கிறது. என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சில நாட்களாக தண்ணீர் வரத்து இல்லாததால் நீர்மட்டம் உயராமல் இருந்தது. தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் நேற்று முன்தினம் முதல் அணைக்கு நீர்வரத்து தொடங்கியது. இதனால் நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 114 அடியாக இருந்தது , தற்போது காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 116.15 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கிருஷ்ணகிரி அணையிலிருந்து சாத்தனூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.




 


இதே நிலையில் தொடர்ந்து தண்ணீர் வருகை தந்தால் இன்னும் ஓரிரு நாளில் அணையின் முழு கொள்ளளவான 119 அடி எட்டி விடும். அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது இருப்பதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அணையின் பாதுகாப்பு கருதி தற்போது அணையில் இருந்து 2617 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து தொடர்கிறது. குப்பனாத்தம் அணையின் 59.04 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 51.66 அடியாக உள்ளது. அணைக்கு 61 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் 52 கனஅடி தண்ணீர் உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண