தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் தற்போது கோப்ரா படம உருவாகியுள்ளது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அவர் நடித்து வரும் படம் கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 11-ந் தேதி வெளியாக உள்ளது.






இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட்டை படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன்த் ஸ்கிரீன் ஸ்டுடீயோஸ் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் செவன்த் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வரும் ஆகஸ்ட் 11-ந் தேதி வெளியிட உள்ளது.




அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்தை செவன்த் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் விக்ரம் ஏராளமான கெட்டப்புகளுடன் இந்த படத்தில் அசத்த உள்ளார்.


அவரது பல்வேறு கெட்டப்புகளுடன் வெளியான அதிரா பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் கே.ஜி.எப். நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் மிர்ணாளினி ரவி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் மியா ஜார்ஜ் மற்றும் கனிகா ஆகியோரும் நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு புவன் ஸ்ரீனிவாசன் எடிட்டிங் செய்துள்ளார்.


விக்ரம் நடிப்பில் கடைசியாக மகான் படம் வெளியானது. கோப்ரா படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோப்ரா படம் வெளியீட்டிற்கு தயாராக இருப்பதால் தற்போது விக்ரம், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண