Cobra Promotion Starts: டைம் டேபிள் போட்டு புரொமோஷன் செய்கிறார்கள் "கோப்ரா" படக்குழுவினர்


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "கோப்ரா". அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்தை செவன்த் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.



இசை வெளியீட்டு விழா :


சில தினங்களுக்கு முன்னர் தான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் விக்ரம், உதயநிதி ஸ்டாலின், இர்பான் பத்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படத்தில் விக்ரம் ஜோடியாக கே.ஜி.எப். புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். 


 






இசை வெளியீட்டு விழா:


இப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர்  ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது படத்தின் விளம்பர பணிகளில் மும்மரமாக ஈடுபட திட்டமிட்டுள்ளனர். "கோப்ரா" படக்குழுவினர் ஆகஸ்ட் 23ம் முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை டூர் செல்ல பிளான் செய்து அதற்கான ஒரு அட்டவணையையும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 


புரொமோஷன் டூர்: 


அந்த அட்டவணையின் படி ஆகஸ்ட் 23ம் தேதி திருச்சி மற்றும் மதுரை, ஆகஸ்ட் 24ம் தேதி கோவை மாவட்டம், ஆகஸ்ட் 25ம் தேதி சென்னையில் "கோப்ரா" படத்தின் ட்ரைலர் வெளியிடப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு ஆகஸ்ட் 26ம் தேதி கொச்சி, ஆகஸ்ட் 27 பெங்களூரு மற்றும் ஆகஸ்ட் 28ம் தேதி ஹைதராபாத் என திட்டமிட்டுள்ளனர். ஆகஸ்ட் 31ம் தேதி மிகவும் கோலாகலமாக திரையரங்குகளில் "கோப்ரா" வெளியாக உள்ளது.  


நடிகர் விக்ரம் பல மாறுபட்ட வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளார் என்பதால் அவரின் ரசிகர்களுக்கு கூடுதல் ஆர்வம். மிகவும் எதிர்பார்ப்போடு வெளியாகவிருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வரும் 25ம் சென்னையில் வெளியாகிறது. ட்ரைலர் வெளியாக இன்னும் சில நாட்களே இருப்பதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.