"ரொம்ப நேரம் படம் எடுத்த பாம்பு கூட கீறிக்கிட்ட தோத்து போய்விடும்" -    அன்றே விஜய் கொடுத்த அட்வைஸ்


'கோப்ரா' திரைப்படத்தின் நீளம் வழக்கமான படங்களை விடவும் சற்று அதிகமாக இருந்ததால் திரை ரசிகர்களுக்கு அலுப்பு தட்டியது. படத்தில் சில சுவாரஸ்யமான பகுதிகள் இருந்தாலும் ரசிகர்கள் ரசிக்க முடியாமல் சோர்வடைகின்றனர்.  


கலவையான விமர்சனங்களை பெற்ற கோப்ரா:


சில தினங்களுக்கு முன்னர் பெரும் எதிர்பார்ப்போடு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரமின் மாறுபட்ட வேடங்களில் வெளியான திரைப்படம் 'கோப்ரா'. இப்படத்தின் திரைக்கதை சுமாராக இருந்தாலும் நடிகர் விக்ரமின் நடிப்பு அவரின் ரசிகர்களை திருப்பி அடைய செய்தது. அவரின் சிறப்பான நடிப்பு வீண்போனது என்பது பலரின் கருத்தாகவே இருந்தது. கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் படம் வெளியான முதல் நாளிலேயே தமிழகத்திலும் மட்டும் சுமார் 12 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.  



படத்தின் நீளம் சுறுக்கப்பட்டது :


ஊடக நண்பர்கள், விநியோகஸ்தர்கள், திரை ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ரசிகர்களின் என அனைவரின் வேண்டுகோள் மற்றும் விமர்சனங்களின் அடிப்படையில் நேற்று 'கோப்ரா' படக்குழுவினர் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டனர். அதாவது படத்தின் நீளம் 20 நிமிடங்கள் சுறுக்கப்பட்டது என அறிக்கையையின் மூலம் தெரிவித்தனர். 


 






 


நடிகர் விஜயின் அறிவுரை :


நம்ம இளைய தளபதிய விஜய் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியின் போது பேசிய ஒரு விஷயம் தற்போது கோப்ரா திரைப்படத்துடன் சம்பந்தப்படுத்தி வருகிறார்கள் நெட்டிசன்கள். நடிகர் விஜய் பேசிய போது இன்றைய இயக்குனர்கள் மிகவும் திறமையானவர்கள். புது புது ஐடியா, வித்தியாசமான திரைக்கதை என பல மாற்றங்களை கொண்டு வருகிறார்கள் அதை நான் வரவேற்கிறேன். இருப்பினும் அவர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். அது எந்த கதையாக இருந்தாலும் இரண்டரை மணி நேரத்திற்குள் சொல்லி முடித்து விட முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் படம் மிக நன்றாகவே இருந்தாலும் ரசிகர்கள் படத்தை பார்ப்பதை விட தங்களின் கடிகாரத்தை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். பொழுதுபோக்காக இருக்க வேண்டிய படம் நேரத்தை வீணடிக்கிறதே என்ற எண்ணத்தை ரசிகர்கள் மனதில் கொண்டு வந்துவிட கூடாது" என அன்றே கூறினார் நம் இளைய தளபதி விஜய்