Cobra first day collection:  கோப்ரா படத்தில் விக்ரமின் நடிப்பு வீணாக்கப்பட்டதா... ரசிகர்கள் கருத்து என்ன?


அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரமின் மாறுபட்ட வேடங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'கோப்ரா' விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக நேற்று உலகமெங்கும் திரையரங்குகளில் மிகவும் கோலாகலமாக வெளியானது. இப்படத்திற்கான விளம்பரம் படு பயங்கரமாக நடைபெற்றது. விக்ரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போனது.


 கோடிகளை குவித்த முதல் நாள் வசூல் :


கோப்ரா வெளியான  முதல் நாளே வசூலை அள்ளி குவித்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் காலெக்ஷன் சுமார் 12 கோடி ருபாய் வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கேரளாவில் ரூபாய் 1.25 கோடி வசூல் செய்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த திரைப்படம் மலேசியாவிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


 



 


ஒரே ஆண்டில் வசூலில் தூள் கிளப்பிய நான்கு படங்கள்:


ரிலீசான  முதல் நாளிலேயே தமிழகத்தில் மட்டும் 12 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பது ஒரு பெரிய சாதனை. இந்த ஆண்டில் மட்டுமே பெரும் வசூலை ஈட்டிய நான்கு படங்களான நடிகர் விஜய் நடித்த பீஸ்ட், நடிகர் அஜித்தின் வலிமை, உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் படங்களின் வரிசையில் இணைந்துள்ளது கோப்ரா திரைப்படம். 


 






 


எதிர்பார்ப்பு என்ன ஆச்சு?


கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வெளியான விக்ரம் படம் இது என்பதால் வழக்கத்தை விடவும் அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. விக்ரமின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் திரைக்கதை சரியாக இல்லாததால் அவரின் நடிப்பு வீண் போனதாகவும் ரசிகர்கள் கருதுகிறார்கள். இருப்பினும் 'கோப்ரா' திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. 


 






படத்தின் நீளம் சில திரை ரசிகர்களை போர் அடிக்க செய்துள்ளது. படத்தின் ஹீரோயினாக நடித்த கே.ஜி.எஃப். படம் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டியின் நடிப்பு சற்று சுமார் தான். பெரிதாக ஈர்க்கவில்லை. சீயான் படத்திற்கு நிகரான எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது ஆனால் அந்த அளவிற்கு படத்தின் திரை கதை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோப்ரா படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.