வாலி படத்தின் போது அஜித் கொடுத்த அட்வைஸ் தற்போதும் தனக்கு நம்பிக்கை அளித்து வருகிறது என்று ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பேசி இருக்கிறார். 


இது குறித்து ரவி வர்மன் பேசும் போது, “ வாலி படத்தில் முதலில்  நான்தான் கேமராமேன். முதல் 2 நாள்கள் அந்தப்படத்தில் வேலை பார்த்தேன். அப்போது ஃபெப்ஸி ஊழியர்கள் சம்பந்தமான பிரச்னை போய்க்கொண்டிருந்தது. அதனால் அந்தப்படத்தில் இருந்து நான் வெளியேற வேண்டிய சூழ்நிலை வந்தது. ஆனால் அந்த படத்தின் காட்சிகளை பார்த்து எஸ்.ஜே.சூர்யா வீட்டிற்கு வந்து பாராட்டினார்.


 






அந்த சமயத்தில் அஜித் சார் எனக்கு அட்வைஸ் சொன்னார். அது, “ ரவி நீங்க யாரையும் பார்த்து பயப்படாதீங்க. பயந்தீங்கன்னா இந்த உலகத்துல வாழ முடியாது” என்றார். காரணம் அந்த சமயத்தில் என்னை பலர் தொடர்பு இந்தப்படம் செய்யக்கூடாது என்று எச்சரித்தனர். அந்த பயத்தில்தான் அந்தப்படத்தை நான் செய்யவில்லை. அன்று அவர் சொன்னது இன்றும் எனக்கு தன்னபிக்கை அளித்து கொண்டிருக்கிறது. அவர் என்னிடம் நீங்கள் நீங்களாக இருங்கள்” என்றார்.


 






தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சில ஆண்டுகள் மலையாளத்தில் பணியாற்றினார். அதன் பின்னர் தெலுங்கு, இந்தி ஆகிய இடங்களில் பணியாற்றி கவனம் ஈர்த்தவர் ஷங்கரின்  ‘அந்நியன்’, கெளதம் மேனனின் ‘ வேட்டையாடு விளையாடு’   கே.எஸ்.ரவிக்குமாரின்  ‘தசாவதாரம்’ விஜயின் ‘ வில்லு’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார். அந்நியனுக்கு பிறகு மீண்டும் இந்தியன் 2 படத்தில் இணைந்திருக்கும் ரவிவர்மன், மணிரத்னத்தின்  ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் பணியாற்றியுள்ளார்.