தேசப்பற்றை வளர்த்ததில் வீதிநாடகங்களுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதே அளவிற்கு சுதந்திரத்திற்குப் பின் தேசப்பற்றை வளர்த்ததில், வளர்த்து வருவதில் சில சினிமாக்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தேசப்பற்றை வளர்த்த நடிகர்களில், நடிகர் அர்ஜூனுக்கு பெரும் பங்கு உண்டு. 


தீவிரவாதிகளை ஒழிப்பது, நாட்டை காப்பாற்றுவது என அவரின் தேசப்பற்றுள்ள படங்கள் ஏராளம், தாராளம். குறிப்பாக, அவரது ஜெய்ஹிந்த் படம், ஒவ்வொரு சுதந்திரதினம் அல்லது குடியரசுத் தினத்தில் ஏதாவது ஒரு சேனலில் கட்டாயம் ஒளிரப்பாகும். அந்த அளவிற்கு, தேசப்பற்றுள்ள காவியங்களை தயாரித்து, இயக்கி, நாட்டுக்கு தந்தனர் நடிகர் அர்ஜூன். 


இன்று நாட்டின் 75வது சுதந்திரனம் நிறைவு பெற்றதை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடி வரும் நிலையில், ஒவ்வொருவரும் கொடியேற்றி மரியாதை செய்து வருகின்றனர். பலர் அவற்றை தங்களின் சமூக வலைதள பக்கங்களில் அவற்றை பகிர்ந்தும் வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நடிகர் அர்ஜூனும் தேசியக் கொடியை ஏற்றி, அதற்கு மரியாதை செய்யும் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை பகிர்ந்தார்.






இதுவரை இல்லாத அளவிற்கு, அவரது ட்விட்டர் பதிவுக்கு பலரும் பதிலளித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கில் ரீட்விட் செய்யப்பட்டும் வருகிறது. குறிப்பாக 90ஸ் கிட்ஸ், தங்களின் கமெண்டுகளை வெள்ளந்தியாக பகிர்ந்து, வேடிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர்.