நாளை சம்பவம்.. வெறித்தனமான அப்டேட் கொடுத்த VP ... கோட் படத்தின் முதல் பாடல் நாளை ரிலீஸ்
நாளை தமிழ் புத்தாண்டை நாளில் தி கோட் படத்தின் அப்டேட் வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. பிரஷாந்த், பிரபுதேவா, லைலா , சினேகா, மோகன், பிரேம்ஜி, வைபவ் எனப் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். யுவன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது தி கோட் படத்தின் முதல் பாடல் நாளை தமிழ் புத்தாண்டு நாளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஷூ திருடிய டெலிவரி பாய்க்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சோனு சூட் - குவியும் கண்டனங்கள்
இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து இந்தியத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சோனு சூட். எனினும் தன் நடிப்பைத் தாண்டி கொரோனா பெருந்தொற்று காலம் தொடங்கி தன் உதவிப் பணிகளுக்காக சோனு சூட் பெரிதும் அறியப்பட்டு வருகிறார். இந்நிலையில் இணையத்தில் வைரலான ஷூ திருடிய நபருக்கு ஆதரவாக சோனு சூட் தற்போது பதிவிட்டுள்ளது கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
விஜய் கட்டிய சாய்பாபா கோயிலில் தரிசனம்.. ஷோபா சந்திரசேகர் பற்றி ராகவா லாரன்ஸ் பகிர்ந்த தகவல்!
நடிகர் விஜய் தன் தாய் ஷோபா சந்திரசேகருக்காக கட்டிக் கொடுத்துள்ள சாய்பாபா கோயிலுக்குச் சென்று நடிகர் ராகவா லாரன்ஸ் தரிசனம் செய்துள்ளார். சென்னை, கொரட்டூரில், 8 கிரவுண்ட் நிலத்தில் நடிகர் விஜய் தன் அம்மாவுக்காக சாய்பாபா கோயிலைக் கட்டிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த சாய்பாபா கோயிலை நடிகர் விஜய்யின் தாய் ஷோபாவுடன் சென்று பார்வையிட்டு வீடியோ பகிர்ந்துள்ளார்.
என்னைவிட அழகான பெண்கள் இருக்கிறார்கள்... தன்னடகத்தோடு பதில் சொன்ன ராஷ்மிகா மந்தனா
தன்னைவிட எத்தனையோ அழகான, திறமையான பெண்கள் இருந்தும் இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பதாக நடிகை ராஷ்மிகா மந்தனா மனம் திறந்து பேசியுள்ளார். கன்னட சினிமா தொடங்கி, தெலுங்கு, இந்தி எனப் பயணித்து இந்திய சினிமாவில் நேஷனல் க்ரஷ் எனும் அடைமொழியுடன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. பாக்ஸ் ஆஃபிஸிலும் இவரது திரைப்படங்கள் வசூல் சாதனை படைத்து வருகின்றன. இந்நிலையில் திரையுலகில் தன்னுடைய இடம், தனக்கு கிடைத்துள்ள வாய்ப்பு ஆகியவை பற்றி ராஷ்மிகா தற்போது பேசியுள்ளார்.
பாலாவுடன் பணியாற்றியது பாக்கியம்.. நிறைவடைந்த வணங்கான் ஷூட்டிங்: அருண் விஜய் நெகிழ்ச்சி!
பாலா -அருண் விஜய் காம்போவில் உருவாகி வந்த வணங்கான் திரைப்படத்தின் ஷூட்டிங் நேற்று நிறைவடைந்தது. சூர்யா நடிக்கவிருந்து பின் அருண் விஜய்க்கு இந்த வாய்ப்பு வந்து, பல சர்ச்சைகளைக் கடந்து தற்போது வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ள திரைப்படம் வணங்கான். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.