• Jigarthanda Double X: 73 வயதில் முதல் படம்: ராகவா லாரண்ஸ் கொடுத்த நம்பிக்கை - ஜிகர்தண்டா நடிகர் ரத்தினம்


தன்னுடைய 73 ஆவது வயதை எட்டியுள்ள நடிகர் ரத்தினம் சென்னையில்  ஜிம் ட்ரெயினராக இருந்து  வருகிறார். இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் நடிப்பதற்காக தன்னை ஸ்டோன் பெஞ்சு நிறுவனம் சார்பாக அழைத்திருந்ததாகவும் முதலில் தயங்கி பின் நடிக்க சம்மதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பாக தனக்கு சினிமா மீது பெரியளவிற்கான அபிப்பிராயம் இல்லாமல் இருந்ததாகவும் ஆனால் இந்தப் படத்திற்காக அனைவரது உழைப்பையும் பார்த்து தனக்கு சினிமா மீது மிகப்பெரிய மதிப்பு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


படத்தில் ஒரு காட்சியில் ராகவா லாரண்ஸை தான் டேய் என்று அழைக்க வேண்டியதாக இருந்ததால் தான் லாரண்ஸிடம் சென்று மன்னிப்புக் கேட்டதாகவும் அதற்கு ராகவா லாரண்ஸ் “நீங்க எனக்கு தந்தை மாதிரி நீங்க என்னை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம்” என்று தனக்கு தைரியம் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் படிக்க



  • Lokesh Kanagaraj: 'என் படத்துல நீங்க நடிக்கணும்’ .. பிரபல நடிகரிடம் சொன்ன லோகேஷ் கனகராஜ்..!


ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள பார்க்கிங் படம் திரைக்கு வர தயாராகியுள்ளது. அண்மையில் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. டிசம்பர் ஒன்றாம் தேதி பார்க்கிங் படம் ரிலீசாக உள்ள நிலையில், இன்று படக்குழுவின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், ஹரீஷ் கல்யாண், இந்துஜா உள்ளிட்ட படக்குழுவுடன் லோகேஷ் கனகராஜூம் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ் கனகராஜ், பார்க்கிங் படத்தில் பிளாக்பஸ்டர் பெறும் அளவுக்கு அனைத்து அம்சங்களும் இருப்பதாக தெரிவித்தார். மேலும், பார்க்கிங் படத்தில் நடித்துள்ள எம்.எஸ். பாஸ்கருடன் இணைந்து வேலை பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த லோகேஷ் கனகராஜ் அது விரைவில் நடைபெறும் என்றார். மேலும் படிக்க

 



  • Actress Premi: ’மகேந்திரனை திருமணம் செய்ததே தவறு.. தண்டனை அனுபவிச்சிட்டேன்’ .. நடிகை பிரேமி உருக்கம்..


மகேந்திரன் வாழ்க்கையில் அவர் திருமணம் ஆனவர் என தெரிந்தும் நான் குறுக்கிட்டு இருக்கக்கூடாது. அது தப்புதான். செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிச்சிட்டேன். 7 வருஷம் நாங்கள் ஒன்னா வாழ்ந்தோம். எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். 7 வருடங்களுக்குப் பின் அவர் படங்கள் பண்ணாமல் போன காரணத்தால் 2 குடும்பத்தையும் சமாளிக்க கஷ்டப்பட்டார். அதனால் மகேந்திரன் என்னை விட்டு பிரிந்து சென்றார். அதன்பிறகு நான் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் கஷ்டப்பட்டேன். மேலும் படிக்க

 



  • Mansoor Ali Khan: “த்ரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி மீது மான நஷ்ட வழக்கு” - மீண்டும் பிரச்சனையை கிளப்பும் மன்சூர் அலிகான்..


நடிகர் சிரஞ்சீவி, நடிகைகள் குஷ்பூ மற்றும் த்ரிஷா ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குஷ்பு, திரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு, நஷ்டஈடு வழக்கு, கிரிமினல் மற்றும்  சிவில் சூட், திட்டமிட்டு கலவரம் உண்டு பண்ண, பொது அமைதியை 10 நாட்களாக கெடுத்து, மடைமாற்றம் செய்ய தூண்டிய அனைத்து பிரிவுகளிலும் வழக்குகள் எனது வழக்கறிஞர் குரு தனஞ்செயன் மூலம் நாளை கோர்ட்டில் தொடுக்க உள்ளேன்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

 



  • Karthik Subbaraj : ஐடி வேலையை விட்டுவிடலாம்னு நினைச்சேன்... 'கற்றது தமிழ்' ஏற்படுத்திய தாக்கம் குறித்து கார்த்திக் சுப்பராஜ்...


சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் திரையுலகில் வருவதற்கு முன்னர் ஒரு சில திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார். 


'கற்றது தமிழ்' திரைப்படம் வெளியான சமயத்தில் நான் ஐடியில் வேலை செய்து கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு பிளாக் எழுதும் பழக்கம் இருந்தது. அந்த படத்தை பார்த்த பிறகு நான் என்னுடைய ப்ளாக்கில் மிகவும் ஃபீல் பண்ணி எழுதி இருந்தேன். அதில் வரும் ஒரு சில வசனங்கள் என்னை மிகவும் பாதித்தது. "ஐடி துறையில் இருந்து வந்து வீட்டு வாடகையை எல்லாம் ஏத்தி விட்டு போயிடுறீங்க. இதை மற்றவர்களால் கொடுக்க முடியுமா? வாடகை மட்டும் அல்ல மொத்தமா வாழ்வாதாரத்தையும் மற்ற எல்லா விஷயங்களின் விலையையுமே நீங்கள் ஏற்றிவிடுவதால் மற்றவர்கள் தானே அதனால் பாதிக்கப்படுகிறார்கள்" என்ற ஒரு வசனம் இருக்கும். அதை கேட்கும் போது எனக்கு உறுத்தலாக இருந்தது. அந்த வசனம் உண்மைதானே. அந்த சமயத்தில் நான் வேலையை விட்டுவிடலாம் என்றெல்லாம் தோன்றியது. அது போல பல திரைப்படங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்து இருந்தார்.மேலும் படிக்க