நட்பு, பகை, விஸ்வாசம்.. மீண்டும் ஹீரோவாக ஜெயித்தாரா சூரி.. கருடன் விமர்சனம் இதோ!


நடிகர் சூரி விடுதலை படத்துக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகனாக ஆக்‌ஷன் அவதாரமெடுத்துள்ள கருடன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன் ஆகிய மூவரை மையப்படுத்தி, நட்பு, அன்பு, துரோகம், நியாயம், விசுவாசம் இவற்றை அழுத்தமாகப் பேசியுள்ளது கருடன். நடிகர் சூரி தன் அழுத்தமான நடிப்பால் மாஸ் காண்பித்து ஃபயர் எமோஜிக்களை பறக்கவிட வைக்கிறார். சசிக்குமார், உன்னி முகுந்தன் தங்கள் கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளனர் சூரிக்காக நிச்சயம் திரையரங்கில் சென்று ரசிக்க்கலாம்.


உத்தரகாண்டில் நண்பர்களுடன் ரஜினி.. வெளியான ஆன்மிகப் பயண புகைப்படங்கள்!


த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்டு துபாய் சென்று ஓய்வெடுத்து விட்டு வந்த கையுடன் தன் ஆன்மிகப் பயணத்தை ரஜினிகாந்த் தொடங்கியுள்ளார். ஒரு வார காலம் இமயமலைக்கு  புறப்பட்டுச் சென்றுள்ள ரஜினி தனது ஆன்மிகப் பயணத்தை உத்ரகாண்டில் தொடங்கியுள்ளார். பத்ரிநாத் கோயிலில் ரஜினி தரிசனம் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.


குட் பேட் அக்லி அஜித்துடன் இணையும் பிரேமலு ஹீரோ நஸ்லென்.. தமிழ், மலையாள ரசிகர்கள் ஹேப்பி!


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படம் வரும் ஆண்டு பொங்கல் வெளியீடாக வரும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்துக்கு இசையமைத்து வரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் ஹைதரபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரேமலு திரைப்படம் மூலம் சூப்பர்ஹிட் கொடுத்து மலையாள சினிமா தாண்டியும் ரசிகர்களை ஈர்த்துள்ள இளம் நடிகர் நஸ்லென் இப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குட் பேட் அக்லி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாக உள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


பாலைய்யா தள்ளி விட்டதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அஞ்சலி.. ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ!


 “கேங்க் ஆஃப் கோதாவரி” படத்தின் ப்ரொமோஷன் விழாவில் கலந்து கொண்ட பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, விழா மேடையில் நடிகை அஞ்சலியைத் தள்ளிவிட்ட வீடியோ நேற்று வைரலாகி கடும் விமர்சனங்களைப் பெற்றது.  அஞ்சலியை நகர்ந்து நிற்குமாறு சைகை காட்டி, பின் சில அடிகள் நகர்ந்து, சட்டென கடுப்பாகி அஞ்சலியைத் தள்ளி விடுவது போல அந்த வீடியோவில் நடந்துகொண்ட நிலையில், அஞ்சலி இந்த செயலுக்கு செய்வதறியாமல் சிரிக்க, நெட்டிசன்கள் பாலகிருஷ்ணாவை திட்டித் தீர்த்து வந்தனர். இந்நிலையில். பாலகிருஷ்ணாவுக்கும் தனக்கும் எப்போதும் பரஸ்பர மரியாதையுடன் கூடிய நட்பு உள்ளது, அதனை தொடர்ந்து பேணி வருகிறோம் எனப் பதிவிட்டு அஞ்சலி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.