சீண்டாதீங்க.. ஆர்.சி.பிக்கு குட்டு? GOAT படத்துடன் சிஎஸ்கேவை ஒப்பிட்ட வெங்கட் பிரபு


தான் என்றுமே சிஎஸ்கே ஆதரவாளர் என்றும் சிஎஸ்கே ரசிகர்களை சீண்ட வேண்டாம் என்றும் மறைமுகமாக ஆர்சிபி ரசிகர்களைத் தாக்கி இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட் செய்துள்ளார். பிளே ஆஃப் செல்வதற்கான  இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணியை வென்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முன்னேறிய நிலையில் இந்தப் போட்டியின் தாக்கம் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் எதிரொலித்து வருகிறது. ஆர்சிபி - சிஎஸ்கே அணி ஆதரவாளர்களிடையேயான மோதல் போக்கு அன்றைய போட்டி மைதானத்துக்கு வெளியே தொடங்கி இன்று இணையம் வரை தொடர்கிறது. இந்நிலையில், பல ஆண்டுகால சிஎஸ்கே அணி ஆதரவாளரான இயக்குநர் வெங்கட் பிரபு தி கோட் படத்துடன் சிஎஸ்கே அணியை ஒப்பிட்டும் சாதனைகளை விளக்கியும், “எங்களை சீண்டாதீர்கள். இப்படிக்கு தி கோட் குழு, இப்போது தெரிகிறதா நாங்கள் ஏன் தி கோட் என்று” எனப் பதிவிட்டுள்ளார்.


தாய்மண் மேல் ஆணை! குதிரையில் வெறித்தனமாய் வந்த சேனாபதி! - இந்தியன் 2 பாடல் ரிலீஸ்!


இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாடலான பாரா இன்று வெளியாகி உள்ளது. ஜூலை 12ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், கமல், சித்தார்த், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, மறைந்த நடிகர்களான விவேக், நெடுமுடி வெணு, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பு, பொருட் செலவு மற்றும் நீண்ட கால மேக்கிங்குக்குப் பிறகு இப்படம் வரும் மாதம் வெளியாக உள்ள நிலையில் தற்போது முதல் பாடல் வெளியாகி வருகிறது.


லேடி சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் கவின்? லோகேஷ் கனகராஜ் டீம்.. வெளியான மாஸ் தகவல்!


லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குநரான விஷ்ணு எடவன் உடன் கவின் அடுத்த படத்தில் இணைவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் இப்படத்தில் கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவுடன் அவர் இணையப் போவதாகவும், 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கப் போவதாகவும், விரைவில் இப்படம் பற்றிய அப்டேட் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


டைட்டிலை அனுமதிக்க மறுத்த சென்ஸார் வாரியம்: வடக்கன் படத்தின் தலைப்பு மாற்றம்


எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் வடக்கன். டிஸ்கவரி சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் குங்குமராஜ் முத்துசாமி, வைரமாலா, ரமேஷ் வைத்யா, பிண்டு, வந்தனா எனப் பலரும் நடித்துள்ளனர். வட மாநிலத் தொழிலாளர்களை மையப்படுத்திய இப்படத்தின் டீசர் வெளியாகி முன்னதாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இப்படத்தின் வடக்கன் என்கிற டைட்டிலை சென்சார் வாரியம் அனுமதிக்க மறுத்துவிட்டதாகவும் இதனால் படத்தின் ரிலீஸ் தாமதாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.