அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் இன்று...படத்தின் இணையும் அந்த பிரபலம் யார்?


ஆதிக் ரச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அப்டேட் வழங்கியுள்ள நிலையில், நடிகர் அஜித் உடன் இணைந்து பணியாற்றவுள்ள பிற நடிகர். நடிகைகள் பற்றிய தகவலாக இந்த அப்டேட் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவல் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


"இளைஞர்கள் போதைப் பழக்கத்திலிருந்து வெளியே வரவேண்டும்" -நடிகர் சூரி.


தமிழ் சினிமாவில் காமெடியன் பாத்திரத்தில் இருந்து குணச்சித்திர நடிகராக உருவெடுத்த வரும் நடிகர் சூரி நடிப்பில் விரைவில் விடுதலை 2, கருடன், கொட்டுக்காளி படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த சூரி தன் படங்கள் குறித்துப் பேசியதுடன், இளைஞர்களிடம் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்தார். கதையின் நாயகனாக வந்த பிறகு பொறுப்புகள் அதிகமாக உள்ளது எனக் கூறிய அவர், போதைப் பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன எனவே இளைஞர்கள் போதை பழக்கத்திலிருந்து வெளியே வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.


கமல் சாரை கேட்க திருப்பதி பிரதர்ஸூக்கு உரிமை இல்லை.. வைத்து செய்கிறார்கள்” - தயாரிப்பாளர் தேனப்பன் ஆதங்கம்!


உத்தம வில்லன் பட விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக தயாரிப்பாளர் தேனப்பன் பேசியுள்ளது சினிமா வட்டாரத்தில் கவனமீர்த்துள்ளது. "உத்தம வில்லன் படம் தோல்வியடைந்தபோது பிரச்னை ஏற்பட்டபோது நிதியை செட்டில் செய்தது ஞானவேல் ராஜா. அதனால் அடுத்த நாளே அந்த லெட்டர் உடன் படத்தின் உரிமையை ஞானவேல் ராஜாவுக்கு சரண்டர் செய்துவிட்டார்கள் அதனால் திருப்பதி பிரதர்ஸ் தற்போது கேள்வி எழுப்ப அவர்களுக்கு உரிமையில்லை எனப் பேசியுள்ளார். மேலும், “ஒரு சினிமா ரசிகனாக நாயகன் கமல் சாரை எல்லாரும் வைத்து செய்வது சங்கடமா இருக்கிறது எனவும் பேசியுள்ளார்.


நடிகர் மட்டுமல்ல.. அதுக்கும் மேல.. கிரிஷ் கர்னாட் பிறந்தநாள் இன்று


இயக்குநர் ஷங்கரின் காதலன் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர் மறைந்த நடிகர் கிரிஷ் கர்னாட். பொதுவாக நடிகராக அறியப்படும் இவரது கலை, இலக்கியம், நாடக உலகம், அரசியல் சார்ந்த செயல்பாடுகள் பலராலும் அறியப்படாத ஒன்று. தனது 23-வது வயதில் யயாதி என்கிற தனது முதல் நாடகத்தை எழுதிய கிரீஷ் கர்னாட், இலக்கியத் துறையில் பெரும் அங்கீகாரம் பெற்றவர். சமகால அரசியலையும் சமூக நீதி தனிமனித சுதந்திரம் உள்ளிட்டக் கருத்துக்களை அடிப்படையாக வைத்து நாடகங்களை கிரிஷ் கர்னாட் எழுதியுள்ளார். கிரிஷ் கர்னாட் தனது கலைச் செயல்பாடுகளுக்காக இன்னும் பாராட்டப்பட வேண்டியவர். 


அழகான, வசதியான பெண்ணை காதலித்தால் நாடக காதலா? - பிரவீன் காந்தி கடும் விமர்சனம்!


சாதியப்  படங்களை எடுத்து வெற்றிமாறனும் பா.ரஞ்சித்தும் தமிழ் சினிமாவை தளர்ச்சியடைய செய்கிறார்கள் எனும் பரபரப்புக் கருத்தை முன்வைத்து கடந்த சில நாள்களாக பேசுபொருளாகி வருபவர் ரட்சகன் பட இயக்குநர் பிரவீன் காந்தி. இதுகுறித்து தொடர்ந்து இவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், “இதயம் படத்தில் கஷ்டப்பட்டு கல்லூரிக்கு வரும் முரளி, தன்னை விட வசதியான ஹீராவை காதலிப்பது போல காட்சிகள் இருக்கும். அதை இப்போது எடுத்தால் நாடகக் காதல் என சொல்லி விடுவார்கள்” என தெரிவித்துள்ளார். மேலும் சாதியரீதியாக படமெடுக்கிறார்கள் என தான் குறிப்பிட்ட லிஸ்ட்டில் மாரி செல்வராஜ், மோகன் ஜி, முத்தையா ஆகியோரது பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.