ஐஸ்வர்யா ராய் கையில் கட்டு... கேன்ஸ் விழாவுக்கு மகளுடன் வருகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!


உலகின் மதிப்புமிக்க சினிமா விருது  விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழா கடந்த மே 14ஆம் தேதி தொடங்கியது. வரும் 25ஆம் தேதி வரை கேன்ஸ் விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த விழாவில் கடந்த 20 ஆண்டுகளாக பங்குபெற்று வரும் நடிகை ஐஸ்வர்யா ராய் முன்னதாக கையில் கட்டுடன் கேன்ஸ் விழாவுக்கு வருகை தந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐஸ்வர்யா ராய்க்கு எப்படி அடிபட்டது எனத் தெரியாத நிலையில்,  ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!


கோலிவுட் வட்டாரத்தில் தற்போதைய பேசுபொருள் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் - பாடகி சைந்தவி பிரிவு. இவர்கள் பிரிவை அறிவித்தது முதல் இணையத்தில் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், எங்கள் விவாகரத்துக்கு எந்த விதமான வெளியாட்களும் காரணமில்லை. ஆதாரமில்லாமல் ஒருவரது கேரக்டரை அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என சைந்தவி பதிவிட்டுள்ளார். மேலும் 24 ஆண்டுகளாக தாங்கள் நண்பர்கள் என்றும் தங்கள் நட்பு இனியும் தொடரும் என்றும் சைந்தவி பதிவிட்டுள்ளார்.


விபத்தில் சிக்கிய நடிகர் மேத்யூ தாமஸ் குடும்பம் - ரசிகர்கள் அதிர்ச்சி


விஜய்க்கு மகனாக லியோ படத்தில் நடித்த மேத்யூ தாமஸ் தன் குடும்பத்துடன் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேத்யூ தாமஸின்  தந்தை பிஜூ, தாய் சூசன், அண்ணன் ஜான், அவரது உறவினர் பீனா என குடும்பத்துடன் காரில் பயணித்த நிலையில், கார் கட்டுப்பாட்டை இழந்து,  விபத்தில் சிக்கியுள்ளது. இதில் மேத்யூவின் உறவினர் பீனா சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, அவரது மற்ற குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.