விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்... 12 ஆண்டுகளுக்குப் பின் திரையரங்குகளில் துப்பாக்கி ரீரிலீஸ்!


நடிகர் விஜய் தன் 50ஆவது பிறந்தநாளை வரும் ஜூன் 22ஆம் தேதி கொண்டாடும் நிலையில், அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக 2012ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த துப்பாக்கி படம் ரீ- ரிலீசாக உள்ளது. 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கும் நடிகர் விஜய் நடிப்பை முழுவதுமாக கைவிடப்போவதாக ஏற்கெனவே அறிவித்த நிலையில் அவரது பட்ங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


அட்டகத்தி தினேஷூக்கு வில்லன் ஆர்யா.. சார்பட்டா 2... பா.ரஞ்சித்தின் அடுத்தடுத்த பட அப்டேட்ஸ்!


இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் புரட்சிகர கருத்துகளின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இயக்குநர் பா.ரஞ்சித்தின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அப்டேட்கள் வெளியாகியுள்ளன. தங்கலான் படம் அடுத்த மாதம் வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில், அட்டக்கத்தி தினேஷ் இப்படத்தில் நாயகனாகவும் ஆர்யா  வில்லனாகவும் நடிக்க வேட்டுவம்  படத்தை ரஞ்சித் இயக்கிவிருக்கிறார். கேங்ஸ்டர் டிராமாவாக உருவாகும் இப்படத்தை அடுத்து, சார்பட்டா இரண்டாம் பாகம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.


சூர்யா பிறந்தநாளில் காத்திருக்கும் 2 படங்களின் அப்டேட்.. மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள்!


கார்த்திக் சுப்பராஜ் உடன் கைகோர்த்து நடிகர் சூர்யா தன் 44ஆவது படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், வரும் ஜூலை 23ஆம் தேதி அவரது பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா 44 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் டைட்டிலை இந்த மாதமே வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதே போல் ரிலீசுக்குத் தயாராக உள்ள கங்குவா படத்தின் மேக்கிங் வீடியோவை கங்குவா படக்குழு சூர்யா பிறந்தநாள் அன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளதாம்.


மீண்டும் காஞ்சனாவை கையில் எடுத்த ராகவா லாரன்ஸ்.. 4 ஆம் பாகம் ஷூட்டிங் எப்போ தெரியுமா?


நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, பெரும் வெற்றி பெற்ற பேய் பட சீரிஸான காஞ்சனா படத்தின் அடுத்த பாகமான காஞ்சனா 4 படத்தின் ஷூட்டிங் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2007ஆம் ஆண்டு இவரது முனி படம் வெளியான நிலையில், அதன் தொடர்ச்சியாக 2011ஆம் ஆண்டு காஞ்சனா படம் இரண்டாம் பாகமாக வெளியானது.  2015ஆம் ஆண்டு காஞ்சனா 2, 2019ஆம் ஆண்டு காஞ்சனா 3 படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், மற்றொருபுறம் காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் அக்‌ஷய் குமார் நடிக்க ராகவா லாரன்ஸ் இயக்கினார். இந்நிலையில் காஞ்சனா 4 படத்தில் மிருணாள் தாகூர் இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.