ஆஸ்கர் விருதுக்குழுவில் உறுப்பினராக இணைந்த இயக்குநர் ராஜமெளலி..


 2024 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது குழுவில் இயக்குநர் ராஜமெளலி இணைந்துள்ளார். ஆஸ்கர் விருது குழுவில் இந்தியா சார்பாக ஏற்கனவே நடிகர் சூர்யா , இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் , இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டவர்கள் இந்த குழுவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.இந்த ஆண்டுக்கான உறுப்பினராக சேர்வதற்காக இந்திய திரைபிரபலங்கள் இயக்குநர் ராஜமெளலி , நடிகை ஷபானா ஆஸ்மி , ஒளிப்பதிவாளர் ரவிவர்மண் , மற்றும் இயக்குநர் ரீமா தாஸ் , நாட்டு நாட்டு பாடலின் நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுக் குழுவின் புதிய உறுப்பினராக சேர்ந்துள்ள இந்திய பிரபலங்களுக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


1 மில்லியனை கடந்த முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங்... ஆர்.ஆர்.ஆர், பாகுபலியின் சாதனையை முறியடிக்குமா கல்கி 2898 AD?


 பிரபாஸ்  நடித்துள்ள திரைப்படம் கல்கி 2898 AD. அறிவியல் புனைகதை மற்றும் புராணங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள உள்ள நாளை திரையில் வெளியாகிறது. கல்கி 2898 AD படம் வெளியாக இன்னும் ஒரே நாள் தான் உள்ள நிலையில் இந்தியாவிலும் உலகளவிலும் டிக்கெட் முன்பதிவு 1 மில்லயனையும் கடந்து விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்து வருகிறது. படம் வெளியாவதற்கு முன்னரே 37 கோடி வரை லாபம் ஈட்டியுள்ளது என வர்த்தக வலைத்தளமான Sacnilkல் வெளியான அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது 50 கோடி வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மீண்டும் இணையும் டான் கூட்டணி.. சிவகார்த்திகேயன் ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா!


நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக “அமரன்” என்ற படத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்துள்ள  இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் மீண்டும் அவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திலும் எஸ்.ஜே.சூர்யா மிக முக்கியமான கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா இடம் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


விஜயின் வழியே சூர்யா... பிறந்தநாள் ஸ்பெஷலாக ரீ ரிலீஸாகும் மாஸ் படங்களின் லிஸ்ட் இதோ


வரும் ஜூலை 23-ஆம் நடிகர் சூர்யா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு அவரின் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளன.அயன்,காக்க காக்க,சிங்கம்,கஜினி,வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளன.


சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்


விடுதலை , கருடன் படத்தைத் தொடர்ந்து சூரி நடிப்பில் அடுத்தபடியாக பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் படம் கொட்டுக்காளி.கொட்டுக்காளி படம் விருது வென்றதை படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். ரோமானியா ரொமானியாவில் நடக்கும் டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் நடுவர்கள் வழங்கு சிறப்பு விருதினை வென்றுள்ளது. 


"காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?


 லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மிக பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த், நெடுமுடி வேணு, மனோபாலா, விவேக், மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். 'இந்தியன் 2' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனை மிகவும் வயதானவராக காட்டுவதற்காக போடப்பட்டுள்ள மேக்கப் சில இடங்களில் அப்பட்டமாக தெரிகிறது. இதுபடத்தில் ஏதும் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்று படம் வெளியான பிறகே தெரிய வரும்.