இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!


நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதியை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. தொடர்ந்து ஜூலை 12 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த படத்தின் ப்ரோமோஷனை உலகமெங்கிலும் நடத்த லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த், நெடுமுடி வேணு, மனோபாலா, விவேக், மாரிமுத்து என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 


ஊழல் அதிகமானதால்தான் இந்தியன் தாத்தா வருகிறார் - ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேச்சு!


சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் விஜயா மாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “இந்தியன் 2 படம் 5 வருடங்களாக எடுக்கப்பட காரணம் அதில் பணியாற்றிய பிரபலங்களோ அல்லது தொழில்நுட்ப கலைஞர்களோ இல்லை. இயற்கை தான் காரணம். கொரோனா, விபத்து என பல விஷயங்கள் இடையூறாக வந்தது. அதிலிருந்து எங்களை மீட்டு தோளில் தூக்கி வந்த லைகா நிறுவனத்துக்கும், ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்கும் இந்தியன் 2 மற்றும் 3 ஆம் பாகம் கடமைப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளா.


"70 நாள் மேக் அப் போட்டு கமல் பட்ட கஷ்டம்" பிரம்மித்துப் போன இயக்குநர் ஷங்கர்!


சென்னையில் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டுள்ளார்கள். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஷங்கர் நடிகர் கமல்ஹாசன் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார். கமல் பற்றி பேசிய ஷங்கர்,”“ இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்ததற்கு காரணம் கமல் சார் தான் . முதல் பாகத்தில் மொத்தம் 40 நாள் தான் கமல் சாருக்கு மேக் அப் போட்டோம். இந்தப் படத்தில் மொத்தம் 70 நாள் மேக் போட்டோம் . தினமும் 3 மணி நேரம் அவருக்கு மேக் அப் போட நேரமாகும். அந்த மேக் அப் போட்டுக் கொண்டு சாப்பிட முடியாது ஸ்ட்ரா வைத்து தான் தண்ணீர் குடிக்க முடியும். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிற்கு முதலில் வருவபவர் கமல்தான் . ஷூட் முடிந்து நாங்கள் எல்லாம் கிளம்பி கடைசியில் கிளம்புவதும் அவர்தான்.” என்று தெரிவித்தார்.


ஆர்.ஆர்.ஆர் படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்குமா பிரபாஸின் கல்கி? ரசிகர்கள் ஆர்வம்


பிரபாஸ்  நடித்துள்ள கல்கி 2898 படம் வரும் ஜூன் 27-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வைஜயந்தி மூவீஸ் தயாரித்து நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன் ,  தீபிகா படூகோன் , கமல்ஹாசன் , ஷோபனா , அனா பென் , திஷா பதானி , பசுபதி  உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் , இந்தி , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. கல்கி படம் இந்தியாவில் 120 முதல் 140 கோடியும் வெளிநாடுகளில் 60 முதல் 70 கோடியும் வசூல் செய்து உலகளவில் 180 முதல் 210 கோடி வரை வசூல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 


பிரம்மாண்ட பட்ஜெட், வில்லனாக பெரிய நடிகர், கன்னட ஹீரோயின் - வெளியான சர்தார் 2 அப்டேட்!


'சர்தார் 2' படத்தின் வில்லனாக மிகவும் பிரபலமான நடிகர் ஒருவர் இணைய உள்ளார் என கூறப்படுகிறது. போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்படம் உருவாக உள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் சென்னையில் படப்பிடிப்பு துவங்க உள்ளதால் அதற்கான செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்க உள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைசான், ஜார்ஜியா மற்றும் கஜகஸ்தான் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது என கூறப்பட்டுள்ளது.