உருப்படியான திட்டம் வேண்டும்.. வெளிநாடு செல்லும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வைரமுத்து அட்வைஸ்


தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான கவிஞர் வைரமுத்து துபாய் சென்றுள்ள நிலையில்,  அங்கு கழிவுகளை அப்புறப்படுத்தும் முறைக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். “துபாயில் இருக்கிறேன் எனக்குப் பின்னால் மலைபோல் தெரிவது மலையல்ல பதப்படுத்தப்பட்ட துபாயின் கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேடு இதில் துர்நாற்றம் இல்லை; சுகாதாரக் கேடு இல்லை; சுற்றுச்சூழல் மாசு இல்லை; நாளை மக்கிய பிறகு தாவர எருவாகும் சாத்தியங்கள் உண்டு வெளிநாடு செல்லும் அமைச்சர்களும் அதிகாரிகளும் இதுபோன்ற உருப்படியான திட்டங்கள் கண்டு உள்நாட்டில் செயல்படுத்துங்களப்பா” எனப் பதிவிட்டுள்ளார்.


“படிப்பு ரொம்ப முக்கியம்.. என்னைக்கும் தலை நிமிர வைக்கும்” - ஹிப்ஹாப் ஆதி பேச்சு!


வாழ்க்கையில் கற்றுக் கொள்ள நிறைய விஷயம் இருக்கிறது என்றும் படிப்பு ரொம்ப முக்கியம் என்றும் நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆதி, “ஹிப் ஹாப் தமிழாவாக நான் பொழுதுபோக்கு மற்றும் கல்வி என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியம் என சொல்லிக் கொள்கிறேன். எல்லா இடங்களில் பேசும்போது படிப்பு ரொம்ப முக்கியம் என சொல்லிக் கொள்கிறேன். படிப்பு நம்மை பண்பட செய்யும். ஒரு நடிகராக நான் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கத்துவேன். கல்வி எனக்கு மிகப்பெரிய மனவலிமையை கொடுத்தது. கல்வி என்றைக்கும் தலைகுனிவை ஏற்படுத்தாது” எனப் பேசியுள்ளார்.


கே.ஜி.எஃப். ஹீரோவுடன் இணைந்த நயன்தாரா! லண்டனில் 150 நாட்கள் ஷூட்டிங்!


கே.ஜி எஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றவர் நடிகர் யஷ் உடன் நடிகை நயன்தாரா அடுத்த படத்தில் இணைந்துள்ளார். அடுத்ததாக யஷ் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு டாக்ஸிக் (Toxic Movie) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சாய் பல்லவி, கரீனா கபூர் நாயகிகளாக நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இப்படத்தில் நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.


”வசூல் மகாராஜா” - விஜய் சேதுபதியின் 50 வது படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?


நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள “மகாராஜா” திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், அபிராம, நட்டி நடராஜ், பாய்ஸ் மணிகண்டன், முனிஷ் காந்த், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். அஜனீஸ் லோக்நாத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று வெளியான இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.4.50 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் sacnilk இணையதளம் பகிர்ந்துள்ளது. விஜய் சேதுபதியின் 50ஆவது படமான இப்படம் சிறு இடைவெளிக்குப் பிறகு நல்ல கமர்ஷியல் வெற்றியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.