கே.ஜி.எஃப் படத்தில் அஜித் குமார்


கே.ஜி.எஃப். படம் முழுவதும் இந்தியா முழுவதும் கன்னட சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் பிரசாந்த் நீல். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்தை விடாமுயற்சி படப்பிடிப்பின் இடைவெளியில் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது பிரசாந்த் நீல் – அஜித் கூட்டணியில் இரண்டு படங்கள் உருவாவது குறித்து பேசப்பட்டுள்ளது.


இந்த நிலையில், அதுதொடர்பான புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்க உள்ள திரைப்படம் ஒன்றில் நடிகர் அஜித் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தை இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றொரு இயக்க உள்ளார். இந்த இரண்டு படங்களுக்காகவும் பிரசாந்த் நீல் மொத்தம் 3 ஆண்டுகள் கால்ஷீட் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரசாந்த் நீல் அஜித்தை வைத்து இயக்கவிருக்கும் இப்படத்தில் கே.ஜி.எஃப் நடிகர் யஷ் நடிக்க இருப்பதாகவும் கே.ஜி.எஃப் மூன்றாம் பாகத்திற்கான தொடக்கமாக இப்படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


குல்தெய்வத்தை வழிபட்டு வந்த தனுஷ் 


தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ராயன் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் இந்த சூழலில் தன்னுடைய குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் தனுஷ். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள முத்துராமலிங்கபுரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது  மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான கஸ்தூரி அம்மாள், மங்கம்மாள் கோவில்.  அந்த ஆலயத்துக்கு மகன்களுடன் தனுஷ், செல்வராகவன், தந்தை கஸ்தூரி ராஜா, தாயார், சகோதரிகள்  என அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனர்.  


புது ஃபெராரி வாங்கிய அஜித்


விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் நடிகர் அஜித் விரைவில் இந்தியா திரும்ப இருக்கிறார். அதற்கு முன்னதாக நடிகர் அஜித் துபாயில் புதிய ஃபெராரி கார் ஒன்றை சொந்தமாக்கியுள்ளார். இந்த காரின் மொத்த விலை 9 கோடியாகும்.


ஐந்து மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற்ற மாளவிகா மோகனன்


 தங்கலான் படத்தில் நடித்த தனது அனுபவத்தை நடிகை மாளவிகா மோகனன்  நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். அப்போது அவர் “ என்னுடைய கதாபாத்திரத்திற்கு மட்டுமே தினமும் 4 முதல் 5 மணி நேரம் மேக் அப் போட வேண்டும். காஸ்டியூம் , மேக் அப் , டேட்டூ என ஒவ்வொன்றும் தனித்தனியாக நடைபெறும். ஒரு நாள் முழுவதும் அத்தனை விதமான கெமிக்கல் போட்டுக் கொண்டு நடிக்க வேண்டும். மேலும் கண்களில் லென்ஸ் வேறு போட்டிருக்க வேண்டும். ஒரு காட்சி சரியாக வரவேண்டும் என்பதற்காக கடும் வெயிலை சகித்துக் கொண்டு அந்த காட்சிக்காக நாங்கள்  நடித்து முடிப்போம். ஆனால் ஷூட் முடிந்தபின் தான் அந்த கெமிக்கல் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். கண்களுக்கு , சருமத்திற்காக என நான் ஒரே நேரத்தில் ஐந்து மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற்று வந்தேன்.” என்று தெரிவித்துள்ளார்