'இந்தியன் 2 ' கிளிம்ப்ஸ் வீடியோ :
நாளை உலகெங்கிலும் வெளியாக இருக்கும் 'இந்தியன் 2' படத்தின் கிளிம்ப்ஸ் காட்சியை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. சேனாபதியின் வர்ம கலை பற்றி சிலாகிக்கும் இந்த வீடியோவில் பாபி சிம்ஹா அவரின் மூன்று சீக்ரெட் பற்றி சொல்கிறார். அது ஒரு முழுமையான வாழ்க்கை முறை. தியானம் தூக்கம் எல்லாமே மிகவும் பர்ஃபெக்ட்டா இருக்கும். ஒரு வேலை உணவு மட்டும் தான். புலியை போல அவர் ஒரு ட்ரிபிள் 'S'. சீக்ரெட், ஸ்லோ, ஸ்டராங். கமல்ஹாசனின் இந்த டெரரான வீடியோ படம் குறித்த எதிர்பார்ப்பை பல மடங்காக உயர்த்தியுள்ளது.
'இந்தியன் 2' ஸ்பெஷல் ஷோ :
ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' திரைப்படம் நாளை ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கி இறுதி காட்சியாக இரவு 2 மணிக்குள் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் திரையிட சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
'இந்தியன் 3' டிரைலர் :
இந்தியன் 2 படத்துடன் இந்தியன் 3ஆம் பாகத்திற்கான மொத்த படப்பிடிப்பு வேலைகளையும் ஏற்கனவே முடிந்துவிட்டது. இரண்டாம் பாகத்திற்கு மொத்தம் ஆறு மணி நேரத்திற்கான ஃபுட்டேஜ் இருந்துள்ளது. அதை சுருக்கினால் படத்தின் சாரம் பாதிக்கும் என்பதால் மூன்றாவது பாகமாக வெளியிட திட்டமிடப்பட்டது. இந்தியன் 2 படம் வெளியாகி அடுத்த ஆறு மாதங்கள் கழித்து இந்தியன் 3 படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. இந்தியன் 2 படத்தின் க்ளைமேக்ஸில் இந்தியன் 3 படத்தின் டிரைலர் இடம்பெறும் என கேரளாவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஷங்கர் தெரிவித்து இருந்தார்.
பாலாஜி முருகதாஸ் அதிரடி முடிவு :
பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'ஃபயர்'. நடிகரும் தயாரிப்பாளருமான சதிஷ் குமார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ரக்ஷிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சிங்கம் புலி, சாந்தினி தமிழரசன், காயத்ரி ஷா, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது. இப்படத்தில் நடித்ததற்கு சம்பளமாக ஒரு பைசா கூட தயாரிப்பாளர் கொடுக்கவில்லை என்பதால் வெறுத்துப்போன பாலாஜி முருகதாஸ் சினிமாவை விட்டு விலகுவதாக கெட்ட வார்த்தையில் திட்டி அதிரடியாக போஸ்ட் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் அவசர பட வேண்டும் என பாலாஜிக்கு கமெண்ட் மூலம் அட்வைஸ் செய்து வருகிறார்கள்.