தங்கலான் ப்ரோமோஷன்
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விக்ரம் , மாளவிகா மோகனன் , பார்வதி திருவொத்து , பசுபதி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தங்கலான் படம் வெளியாக இன்னும் ஒரு வார காலம் இருக்கும் நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் பகுதியாக இன்று படக்குழு ஹைதராபாத் கிளம்பி சென்றுள்ளது. இப்படத்தை இயக்கியது குறித்து பா ரஞ்சித்தும் நடித்தது குறித்த தங்கள் அனுபவங்களை நடிகர்கள் பகிர்ந்துகொண்டு வருகிறார்கள்.
மேலும் படிக்க :
கேரள அரசுக்கு நீதி வழங்கிய டோலிவுட் நட்சத்திரங்கள்
வயநாட்டில் கடந்த ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு மீட்பு பணிகள் 6 ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த பேரிடரில் 360 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவ படையினர் மொத்தம் 1300 க்கும் மேற்பட்டவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
திரைத்துறையைச் சேர்ந்த பலர் கேரள அரசுக்கு நிதி உதவிகளை செய்து வருகிறார்கள். தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த நடிகர் விக்ரம் , நயன்தாரா , உள்ளிட்டவர்கள் நிதி வழங்கினார்கள். மலையாள நடிகர்கள் ஃபகத் ஃபாசில் , மம்மூட்டி , மோகன்லால் ,ஃபகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் நிதி வழங்கினார்கள்.
தற்போது தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் சீரஞ்சீவி , ராம்சரண் ஆகிய இருவரும் இணைந்து 1 கோடி நீதி அறிவித்துள்ளார்கள். இவர்களுடன் நடிகர் அல்லு அர்ஜூன் 25 லட்சம் வழங்கியுள்ளார்.
அந்தகன் படத்துடன் மோதும் C/O கவுண்டம்பாளையம்
நடிகர் ரஞ்சித் கவுண்டம்பாளையம் என்ற திரைப்படத்தை இயக்கி, நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த ஜூலை 5 ஆம் தேதி வெளியாக இருந்த இப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. இது குறித்து பேசிய நடிகர் ரஞ்சித் " இந்த படம் வெளியிட கூடாது என்பதில் பலர் முனைப்போடு இருக்கின்றனர் என தியேட்டர் உரிமையாளர்கள் சொல்லும் போது வருத்தமாக இருக்கிறது. நாடக காதலை பற்றியும், பெற்றோர்களின் வலியையும் படமாக எடுத்துள்ளேன். இதற்கு பல இடங்களிலிருந்து எதிர்ப்பு வருகிறது. ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்று எனக்கு தெரியும். என் வாயில் வந்த கருத்துக்கள் அனைத்தும் உண்மையே. நான் அரசியல்வாதி கிடையாது. இந்த படத்தின் வெற்றி தான் என்னை எதிர்பவர்களுக்கு நான் சொல்லும் பதில்" என்று தெரிவித்திருந்தார்.
தற்போது இப்படம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.