கேரள அரசுக்கு சூர்யா நிதியுதவி
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள் . மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.
நிலச்சரிவின் மீட்பு பணிகள் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் காண்போர் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த பெருந்துயரில் மீள முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.
இந்த நிலையில், பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 இலட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயனை பாராட்டிய வசந்தபாலன்
மாயாண்டி குடும்பத்தார் , முத்துக்கு முத்தாக உள்ளிட்ட படங்களை இயக்கிய ராசு முருகன் புற்றுநோயால் கடந்த 2014 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
தனது கனவனின் மறைவுக்குப் பின் தனது இரு பெண்களுடன் பொருளாராதார நெருக்கடியில் வாழ்ந்து வருவதாக ராசு மதுரவனின் மனைவி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் ராசு மதுரவனின் இரு மகள்களின் ஒரு ஆண்டிற்கான கல்வி கட்டணமாக ஒரு லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளார். இதேபோல் தான் கொரோனா நொய்த்தொற்றால் பாதிக்கப் பட்டிருந்தபோது சிவகார்த்திகேயன் தனக்கு ஃபோன் செய்து பண உதவி வேண்டுமா என்று கேட்டதாக இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார். எந்த சம்பந்தமும் இல்லாதவர்களுக்கு சிவகார்த்திகேயன் செய்து வரும் உதவியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
யோகி பாபுபின் போட் பட விமர்சனம்
இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள போட் படம் வரும் ஆக்ஸ்ட் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. போட் படத்தின் சிறப்பு திரையிடல் இன்று சென்னையில் நடைபெற்றது.
ஒருபுறம் இரண்டாம் உலகப்போர், மறுபுறம் சுதந்திர போராட்டம் நடக்கும் 1943ம் ஆண்டே கதைக்களம் ஆகும். ஹிட்லரின் ஆதரவு நாடாக இருந்த ஜப்பான் குண்டு மழை பொழிந்து மற்றவர்களை அச்சுறுத்தி வந்த சூழலில், சென்னையில் கடற்கரையோரம் உள்ள வெள்ளையர்களின் முகாமின் தீடீரென குண்டு வீசப்போகிறார்கள் என்ற தகவல் பரவுகிறது. இதையடுத்து, மக்கள் பதற்றத்தில் தப்பியோடுகின்றனர்.
அந்த முகாமில் கைதியாக உள்ள தனது தம்பியை விடுவித்து அழைத்துச் செல்லும் மீனவர் குமரனும், அவனது பாட்டியும் உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர்களது படகில் கடலுக்குள் தப்பிச் செல்வதே படத்தின் கதை.
முழு விமர்சனத்தைப் படிக்க : BOAT Movie Review: சிம்புதேவனின் போட் கரை சேர்ந்ததா? கடலில் மூழ்கியதா? முழு திரை விமர்சனம்
வாஸ்கோடகாமா பட விமர்சனம்
ஆக்ஸ்ட் 2 ஆம் தேதி வெளியாக இருக்கும் மற்றொரு படம் நடிகர் நகுல் நடிப்பி உருவாகி இருக்கும் வாஸ்கோடகாமா.
நகுல், வம்சி கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார். முனிஷ்காந்த், ஆனந்தராஜ் என பெரிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். படம் நிகழ்காலத்தில் இருந்து எதிர்காலத்தில் நடப்பது போல படமாக்கப்பட்டுள்ளது.
அதாவது, பூமி படைக்கப்பட்டபோது நல்லவர்கள் மட்டுமே வாழ்ந்தனர், பின்னர், நல்லவர்கள் தீயவர்களும் தனித்தனியாக வாழ்ந்தனர், அதன்பின்பு நல்லவர்களும் தீயவர்களும் ஒன்றாக வாழ்ந்தனர் என்றும், அதற்கு அடுத்து தீயவர்களே பெரும்பாலானவர்கள் வாழ்வதாகவும், அவர்களுக்காகவே சட்டங்களும், அரசுகளும் நடைபெறுவதாகவும், அங்கு நல்லவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக கருதப்படும் காலம் வரும் என்றும், அந்த காலத்தில் படத்தின் கதை நடப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
முழு விமர்சனத்தை படிக்க : Vasco Da Gama Review: வெற்றி பெற்றாரா நகுல்? வாஸ்கோடகாமா படம் எப்படி இருக்குது? முழு விமர்சனம்