காற்றில் கரைந்த ஆனந்த ராகம்.. பின்னணிப் பாடகி உமா ரமணன் காலமானார்


80களின் தமிழ் சினிமாவின் பல மனதை மயக்கும் பாடல்களைப் பாடி தன் தனித்துவக் குரலால் ரசிகர்களைக் கவர்ந்த பாடகி உமா ரமணன் நேற்றிரவு காலமானார். நிழல்கள் படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’, பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த ராகம்’ போன்ற இவரது பாடல்கள் பெரும் ஹிட் அடித்ததுடன் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. 


ரஹ்மான் பிரபுதேவா கூட்டணியில் தொடங்கியது படப்பிடிப்பு...சூப்பர் கூலாக வெளியான ஃபோட்டோஸ்


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் - நடிகரும் கொரியாகிராஃபருமான பிரபுதேவா என இவர்களது காம்போவுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், இவர்கள் இருவரும் தற்போது 25 ஆண்டுகளுக்கு பிறகு புதிய படத்தில் ஒன்றிணைய உள்ளனர். கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக புதிய போஸ்டருடன் பிரபுதேவா உற்சாகமாக அறிவிப்பினைப் பகிர்ந்துள்ளார். 


நிகழ்ச்சிக்கு வராத பிரபு தேவா! திடீரென மயங்கி விழுந்த குழந்தைகள் - அதிர்ச்சியில் பெற்றோர்! நடந்தது என்ன?


பிரபல நடிகரும் கொரியோகிராஃபருமான பிரபு தேவாவின் சினிமா பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாக  ‘100 நிமிடங்கள் 100 பிரபுதேவா பாடல்’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த குழந்தைகள் வெயில் தாக்கத்தில் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தன்னால் பங்கேற்க முடியாதது பற்றி பிரபுதேவா மன்னிப்பு கோரியுள்ளார்.


மகள் வீட்டில் கெத்தாக ரஜினி.. புது வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினி.. வைரலாகும் வீடியோ


நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னையில் தனி வீடு ஒன்றை வாங்கியுள்ள நிலையில் இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இந்த வீட்டிற்கான உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன் மகளுக்கு நேரில் சென்று உற்சாகமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


மேதகு படத்தின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்


 மேதகு திரைப்படத்துக்கு இசையமைத்த கவனமீர்த்த இசையமைப்பாளர் பிரவீன் குமார் இன்று காலமானார். கடந்த சில மாதங்களாக  பிரவீன் குமாரின் உடல் நலம்  மோசமடைந்திருந்த நிலையில், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.  இதனை தொடர்ந்து நேற்று மே 1 ஆம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மே 2-ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.