இளையராஜா ஃபோட்டோவை வெச்சு வைரமுத்து தினமும் கும்பிடணும்.. கொதித்த கங்கை அமரன்


இளையாராஜாவின் பாடல்களின் காப்புரிமை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இது தொடர்பாக சமீபத்தில் வைரமுத்து நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்தபோது, இசையைவிட பாடல் வரிகள் சிறந்ததாக திகழும் சந்தர்ப்பங்களும் உண்டு , இதை புரிந்துகொண்டவர் ஞானி புரிந்துகொள்ளாதவன் அஞ்ஞானி  என இளையராஜாவைத் தாக்கி பேசி இருந்தார். இளையராஜாவின் ஃபோட்டோவை வைத்து வைரமுத்து வணங்க வேண்டும் , இளையராஜா இல்லையென்றால் வைரமுத்து என்கிற பெயரே இருந்திருக்காது என கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.


தனுஷ் லிஸ்ட் ரொம்ப பெருசு... இப்போதைக்கு குபேரா படத்தின் டீசர் தான் வைரல் அப்டேட்


சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் குபேரா படத்தின் டீசர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் குபேரா. ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க நாகர்ஜூனா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் வரும் மே மாதம் 2ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


குக்கு வித் கோமாளியின் போட்டி நிகழ்ச்சியில் வடிவேலு! சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு அப்டேட்!


விஜய் டிவின் குக்கு வித் கோமாளியில் இருந்து விலகி சன் தொலைக்காட்சியில் நுழைந்துள்ள செஃப் வெங்கடேஷ் பட் பங்கேற்கும் புதிய நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது.  குக்கு வித் கோமாளி பாணியில் "டாப் குக்கு டூப் குக்கு" என்ற பெயரில் புதிய காமெடி கலந்த குக்கிங் ஷோ ஒன்று சன் தொலைக்காட்சி ஒளிபரப்பாகவுள்ளது என்பதற்கான ப்ரோமோ வெளியானது. வடிவேலு இந்த நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு எண்ட்ரி தர உள்ளதாகக் கூறப்படுகிறது.


செக் கொடுத்தால் தான் டப்பிங்: கமலால் நொந்து போன வேட்டையாடு விளையாடு தயாரிப்பாளர்?


கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான படம் வேட்டையாடு விளையாடு. கமல்ஹாசன், ஜோதிகா, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி, அபிராமி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். கடந்த ஆண்டோடு வேட்டையாடு விளையாடு படம் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்நிலையில், வேட்டையாடு விளையாடு படத்தின்போது சம்பளத் தொகை மீதமிருந்ததால் நடிகர் கமல்ஹாசன் படத்துக்கு டப்பிங் பேச மறுத்துவிட்டதாக இப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.