விறுவிறுப்பாக கெட் அப்பை மாற்றிய விஷால்; தாமிரபரணி அளவு வொர்த்தா? ரத்னம் படத்தின் விமர்சனம்!
நடிகர் விஷால் - இயக்குநர் ஹரி மூன்றாம் முறையாக கூட்டணி வைத்துள்ள ரத்னம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பு மற்றும் சில சிக்கல்கள் தாண்டி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிர்சாத் இசையமைத்துள்ளார். ஆதரவற்ற சிறுவனான விஷால் தன்னை சிறுவயதில் ஆதரித்த சமுத்திரக்கனிக்காக கொலை செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளி செல்கிறார். பின் அடியாளாக வளர்ந்து வலம் வரும் அவர் நாயகி பிரியாவை ஒரு இக்கட்டில் இருந்து காப்பாற்ற அதனைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் படத்தின் மீதி கதையாக உள்ளது.
வெள்ளை நிற திருமண ஆடையை கருப்பு கவுனாக மாற்றியமைத்த சமந்தா.. அவரே தந்த விளக்கம்!
நடிகை சமந்தா விவாகரத்துக்குப் பின் கிட்டத்தட்ட3 2 ஆண்டுகள் கழித்து தன் விலைமதிப்பற்ற திருமண ஆடையை மாற்றியமைத்து அதற்கான காரணத்தையும் பகிர்ந்துள்ளார். நடிகை சமந்தா நடிகர் நாகசைதன்யாவை 2017ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில்ல் இருவரும் 2021ஆம் ஆண்டு தங்கள் உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்தனர். ஒந்நிலையில் ஒரு விருது நிகழ்ச்சிக்காக தன் திருமண ஆடையை சமந்தா தற்போது மாற்றியமைத்துள்ளார்.
"தயாரிப்பாளர் சங்கத்துக்கே அவமானம்” - ரத்னம் பட விவகாரத்தில் கொந்தளித்த விஷால்!
விஷால் - ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் ரத்னம் படத்துக்கு திரையரங்குகள் தராமல் தன்னை சுற்றலில் விடுவதாக நேற்று விஷால் பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இன்று “கட்ட பஞ்சாயத்து வளர்ந்து எந்த பயமும் வருத்தமும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இந்தத் தயாரிப்பாளர் சங்கம் எதற்கு இருக்கிறது என்ற காரணம் கடவுளுக்கு மட்டுமே தெரியும். நிச்சயம் இது உங்கள் அனைவருக்கும் அவமானம்” எனப் பதிவிட்டுள்ளார்.
பிரச்னை என்கிட்ட இல்லை.. உன்கிட்டதான்.. இஸ்லாமிய மதவெறுப்பு பதிவுகளுக்கு பதில் கொடுத்த இர்ஃபான்
குக்கு வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் விரைவில் போட்டியாளராக எண்ட்ரி கொடுக்கவுள்ள யூடியூபர் இர்ஃபான், மத வெறுப்பு கமெண்டுக்க் அளித்துள்ள பதில் இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. உள்ளூர் முதல் வெளிநாடு வரை உள்ள ஹோட்டல்கள், உணவுப் பண்டங்களுக்கு விமர்சனங்கள் வழங்கி யூடியூப் செலிப்ரிட்டியாக வலம் வருபவர் பிரபல யூடியூபரான இர்ஃபான். ஒருபுறம் பிரபலமாக வலம் வரும் இவரைச் சுற்றி சர்ச்சைகளும் வலம் வந்தபடி உள்ளன.
அப்பாவி மக்களை துன்புறுத்துபவர்களுக்கு எதிரா ஓட்டு போடுங்க.. பார்வதி வேண்டுகோள்..
பூ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள நடிகை பார்வதி தன் வித்தியாசமான ரோல்கள், துணிச்சலான கருத்துக்களால் பல ஆண்டுகளாக சினிமா உலகில் கவனமீர்த்து வருகிறார். தற்போது இயக்குநர் பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ள பார்வதி, தேர்ந்தெடுத்த படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இன்று இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தன் இணைய பக்கத்தில், “மதத்தை ஆயுதமாக பயன்படுத்தி அப்பாவி மக்களை துன்புறுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள்” என பார்வதி பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: