அபர்ணா தாஸூக்கு நாளை கல்யாணம்..களைகட்டிய வடக்கஞ்சேரி.. தொடங்கியது கொண்டாட்டம்!
பீஸ்ட், டாடா படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரலமான நடிகை அபர்ணா தாஸின் திருமண கொண்டாட்டப் புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன. மலையாள நடிகையான அபர்ணா தாஸ், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்த பிரபல நடிகரான தீபக் பரம்போலை கரம்பிடிக்க உள்ளார். நாளை இவர்களது திருமணம் கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் நடைபெற உள்ளது.
ரத்னகுமாரை கழற்றி விட்ட லோகேஷ்.. புதிதாக வந்த சந்துரு அன்பழகன் யார் தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்த் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் கூலி திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு நேற்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனராஜ் தன் ஆஸ்தான டீமுடன் களமிறங்கும் இப்படத்தில், அவரது முந்தைய லியோ, விக்ரம் படங்களில் இணைந்து பணியாற்றிய இயக்குநர் ரத்னகுமார் விலகியுள்ளது பேசுபொருளாகி உள்ளது. மேயாத மான், ஆடை படங்களின் இயக்குநரான ரத்னகுமார் லோகேஷின் மாஸ்டர் படம் தொடங்கி வசனகர்த்தா, திரைக்கதை எழுத்து என பணியாற்றி வரும் நிலையில், முன்னதாக லியோ பட விழாவின்போது நடிகர் ரஜினியை மறைமுகமாக விமர்சித்ததாக இணையத்தில் விமர்சனங்கள் கிளம்பின.
“மாரி செல்வராஜ் போன்றவர்களை காலி செய்யும் பெரிய ஹீரோக்கள்” - ராஜ் கபூர் குற்றச்சாட்டு
மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் கஷ்டப்பட்டு முதல் படம் எடுக்கிறார்கள் ஆனால் அவர்களை அடுத்த அடி வளர விடக்கூடாது என்பதில் பெரிய ஹீரோக்கள் உறுதியாக இருப்பதாக நடிகர் ராஜ் கபூர் குற்றம் சாட்டியுள்ளார். சந்தோஷ் நம்பிராஜன் இயக்கியுள்ள உழைப்பாளர் தினம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ராஜ் கபூர், பெரிய படமோ, சின்ன படமோ கொள்கையை எப்போதும் கொஞ்சம் கொஞ்சமாக திணிக்க முயற்சிக்க வேண்டும்” எனtத் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்த்த மாதிரி அமையாத படம்.. முதல் படத்தில் நொந்துபோன இயக்குநர் விஜி!
2001ஆம் ஆண்டு பிரபுதேவா, லைலா நடிப்பில் வெளியான அள்ளித்தந்த வானம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஜி. அவர் தன் முதல் படம் குறித்து சமீபத்திய நேர்க்காணலில் மனம் திறந்துள்ளார். நெகட்டிவ் ரோலில் மட்டும் 2500 அடி வெட்டப்பட்ட நிலையில், படம் துண்டு துண்டாகி விட்டது என்றூம், இதனால் படத்தின் தரம் இல்லாமல் போய் விட்டது” என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் 15 பாடல்கள் ரெக்கார்டிங்.. எஸ். ஜானகி பற்றி பலரும் அறியாத சில தகவல்கள்!
தென்னிந்திய சினிமாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பாடகி எஸ். ஜானகியின் பிறந்தநாள் இன்று. தன்னுடைய தனித்துவமான இனிய குரலால் பல தலைமுறை ரசிகர்களை கவர்ந்த எஸ்.ஜானகி 60 ஆண்டுகள் 17 மொழிகளில் 48000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி சாதனை படைத்துள்ளார்.