ரஜினியின் 171-வது பட டைட்டில் வெளியீடு


நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 171 வது படத்தின் டைட்டில் இன்று (22.04.2024) மாலை வெளியாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் 90 சதவிகிதம் முடிவடைந்து விட்டது. ரஜினிகாந்த் தனது 171வது படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணைய உள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு விதமான வாட்ச்களை கைவிலங்காக ரஜினி மாட்டிக்கொண்டு இருக்கும் போஸ்டர்களும் வெளியாகி டைட்டில் என்னவாக இருக்கும் என யோசிக்க வைத்தது. இந்நிலையில், ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கான டைட்டில் அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


அரசியல் கட்சிக்கு ஆதரவாக பேசியதைப்போல போலி வீடியோ.. 


செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் நடிகர் ரன்வீர் சிங் அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. மல்ஹோத்ராவின் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் வாரணாசியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரன்வீட் சிங் மற்றும் க்ரிதி சனோன் ஆகிய இருவரும் கலந்துகொண்டார்கள். இந்த வீடியோவை வைத்து ரன்வீர் சிங் பேசியது போல ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது. அதில் அவர் இந்தியாவின் முதன்மையான அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிக்கும்படி பேசியிருந்தார்.இதற்கு ரன்வீர் சிங் அளித்து வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.


இயக்குநர் துரை காலமானார்


தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர்,  கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமையாளராக விளங்கியவர் இயக்குநர் துரை. பசி, நீயா உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்த துரை இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. கமல் நடித்த நீயா, சிவாஜியின் துணை, ரஜினியின் ஆயிரம் ஜென்மங்கள்,  அவளும் பெண் தானே, பசி, கிளிஞ்சல்கள் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என 47 படங்களை இயக்கியுள்ளார். துரை இயக்கத்தில் 1979ம் ஆண்டு வெளியான 'பசி' திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை என மூன்று பிரிவுகளின் கீழ் அந்த ஆண்டிற்கான தேசிய விருதை கைப்பற்றியது.


"தமிழக அரசே தடை செய்”. இயக்குநர் மோகன் ஜி


Smoke Biscuit என்ற ஸ்நாக்ஸை தமிழக அரசு உடனடியாக தடைசெய்ய வேண்டும் என இயக்குநர் மோகன் ஜி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அதில், “இது போன்று விற்கும் #SmokeBiscuit என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.. குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள்.. அதில் ஊற்றப்படுவது #LiquidNitrogen.. ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து.. தமிழக அரச  இதற்கு தடை விதிக்க வேண்டும்” என முதலமைச்சர் ஸ்டாலினின் ஐடியை குறிப்பிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். 


போறானே..போறானே” பாடல் உருவான தினம்


வாகை சூடவா படத்தில் இடம்பெற்ற “போறாளே.. போறாளே.” என்ற பாடல் உருவான விதம் குறித்து இயக்குநர் சற்குணம் நிகழ்ச்சி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். “ஜிப்ரான், சாய் உள்ளிட்டோர் இணைந்து போரானே..போரானே பாடலை உருவாக்கினர். அது சூப்பர் ஹிட். அந்த பாடல் வாகை சூடவா படம் வெளிவருவதற்கு முன்னதாக 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இந்த பாடல் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் 2ஆம் பரிசு வாங்கியது. அப்படியே மறந்தும் விட்டார்கள். ஒருநாள் ஜிப்ரான் இந்த பாடலின் ட்யூனை பாடவும் நான் கேட்டேன். ஜிப்ரானின் இயற்பெயர் விஜய் தான். நானும் அவரை அப்படித்தான் கூப்பிடுவேன். அந்த ட்யூனை கேட்டதும், விஜய் சூப்பரா இருக்கு. இதை நான் படம் பண்ணும் போது உபயோகித்து கொள்கிறேன் என சொன்னேன். நாங்கள் உதவியாளர்களாக இருந்தபோதே அந்த பாடல் உருவாகி விட்டது” என இயக்குநர் சற்குணம் தெரிவித்திருந்தார்.