உழைப்பாளிக்கு வாய்ப்பு தந்த உழைப்பாளி! எஸ்.ஜே.சூர்யா முதல் முருகதாஸ் வரை: அஜித்தை வாழ்த்திய இயக்குநர்கள்!


நடிகர் அஜித்குமார் மே 1 உழைப்பாளர் தினமான இன்று தன் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அஜித் அறிமுக இயக்குநர்களாக வாய்ப்பு தந்து இன்று பெரிய அளவில் வளர்ந்து கவனமீர்த்து வரும் எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இயக்குநர்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.


நடிகர் சல்மான் கான் வழக்கில் கைதானவர் சிறையில் தற்கொலை!


நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்ட வழக்கில் கைதானவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்.14ஆம் தேதி சல்மான் கான் வீட்டருகே நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச்சூட்டில் நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் விசாரணைக் கைதியாக இருந்து வந்த அனுஜ் தாபன் என்பவர் சிறையில் இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.


ரஜினிக்கு செக் வைத்த இளையராஜா.. கூலி படம் தொடங்குவதற்கு முன்பே வந்த சிக்கல்!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள கூலி படத்தின் டைட்டில் டீசரில் தன் இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா சன் பிச்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக வெளியான கூலி படத்தின் டைட்டில் டீசர் வீடியோவில் இளையராஜா இசையமைத்த தங்க மகன் படத்தில் இடம்பெற்ற டிஸ்கோ பாடலின் இசை பயன்படுத்தப்பட்டிருந்தது.


நீ தோள தூக்கி நடந்தா தூள் பறக்கும்.. வெளியான புஷ்பா 2 முதல் பாடல்!


சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் முதல் பாடல் இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது.


”இந்த பாட்டு இளையராஜாவுக்கு மட்டும் சொந்தம் அல்ல” - மீண்டும் சீண்டிய வைரமுத்து!


உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்துப்பதிவில் மீண்டும் இளையராஜாவைத் தாக்கும் வகையில் பதிவிட்டுள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து, பாடல்களில் இசை பெரியதா? வரிகள் பெரியதா? என்ற ரீதியில் இளையராஜாவை மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் தன்னுடைய தற்போதைய பதிவில், இந்தச் சிறப்பு நாளுக்கு ஒரு சிவப்புப் பாடல் காணிக்கை. எழுத்து - வைரமுத்து, இசை- இளையராஜா. குரல் ஜேசுதாஸ். இந்தப் பாட்டு இந்த மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம்” எனத் தெரிவித்துள்ளார்.