தங்கலானில் அசுரத்தனமான அர்ப்பணிப்பு.. விக்ரம் பிறந்தநாளில் வெளியான கண்கலங்க வைக்கும் வீடியோ.!
நடிகர் விக்ரம் இன்று தன் 58ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அவரது பிறந்தநாள் ஸ்பெஷல் க்ளிம்ஸ் வீடியோவினை தங்கலான் படக்குழு பகிர்ந்துள்ளது. பா.ரஞ்சித் உடன் முதன்முறையாக விக்ரம் கைகோர்த்துள்ள திரைப்படம் தங்கலான், நடிகைகள் பார்வதி, மாளவிகா, நடிகர் பசுபதி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் விக்ரம் வழக்கம்போல் அசுரத்தனமான நடிப்பை வழங்கியுள்ள நிலையில், அவருக்கு நிச்சயம் விருதுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவேக் மறைந்தாலும் தொடரும் அவரது லட்சியம்! கனவுத் திட்டத்தை நனவாக்கும் நண்பர்கள்!
தமிழ் சினிமாவில் கோலோச்சி மறைந்த பிரபல காமெடி நடிகர் விவேக்கின் 3ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று. 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி தன் 59ஆவது வயதில் விவேக் திடீரென காலமானது திரைத்துறையினர், ரசிகர்கள் என ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், விவேக் தான் உயிருடன் இருந்தபோது பெரும் ஈடுபாட்டுடன் செய்து வந்த மரக்கன்றுகள் நடும் சமூகப் பணியை அவர் மறைந்த பின்னும் அவரது ரசிகர்கள் கையிலெடுத்து கண்ணும் கருத்துமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மைந்தனாக தனுஷ்.. இளனுடன் அடுத்த படம் - வெளியான சூப்பர் தகவல்!
ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேம காதல், கவின் தற்போது நடித்து வரும் ஸ்டார் ஆகிய திரைப்படங்களின் மூலம் கவனமீர்த்துள்ளவர் இயக்குநர் இளன். இவர் நடிகர் தனுஷ் உடன் தன் அடுத்த திரைப்படத்தில் இணைவதாக தன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். மதுரையை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை அமைந்திருப்பதாகவும் தனுஷ் நம்பிக்கையுடன் இப்படத்துக்காக காத்திருப்பதாகவும் இளன் தெரிவித்துள்ளார்.
27 வயது பிரபல சினிமா விமர்சகர் ஆங்ரி ரேண்ட்மேன் உயிரிழப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!
சமூக வலைதளங்களில் தன் தனித்துவ பாணியில் சினிமா விமர்சனங்களை முன்வைத்து இணையவாசிகள் மத்தியில் பிரபலமான யூடியூபர் ஆங்ரி ரேண்ட்மேன் (Angry Rantman) உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 27 வயது ஆங்ரி ரேண்ட்மேன் முதலில் யூடியூபில் கிரிக்கெட், ஃபுட்பால் விமர்சனங்கள் செய்யத் தொடங்கி, பின் சினிமா விமர்சனங்களால் பிரபலமானார். இவருக்கு முன்னதாக இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில் நேற்றிரவு இவர் உயிரிழந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
வாழ்க்கையே காலியாகிடுச்சுன்னு நினைச்சேன்.. அரண்மனை படத்தால் நொந்துபோன சுந்தர் சி
அரண்மனை படத்தின் 2-ஆம் பாகத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தன்னுடைய வாழ்க்கையே முடிந்துவிட்டதாக தான் எண்ணியதாக இயக்குநர் சுந்தர்.சி மன வருத்ததுடன் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் கமர்ஷியல் படங்கள் எடுப்பதில் சிறப்பானவராக வலம் வந்த இயக்குநர் கடந்த சில ஆண்டுகளாக அரண்மனை படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வருகிறார். இந்நிலையில் தன் கரியரில் தான் அரண்மனை 2-ஆம் பாகத்தை எண்ணி தான் மிகவும் பயந்ததாக சுந்தர்.சி பகிர்ந்துள்ளார்.