கிறிஸ்துமஸ் விழா இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திரைப் பிரபலங்கள் தங்கள் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். 






கிறிஸ்தவர்களின் இறைவனாக போற்றப்படும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25 ஆம் தேதி “கிறிஸ்துமஸ்” ஆக  கொண்டாடப்படுகிறது.






கிறிஸ்தவர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் இன்று, உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.


அந்த வகையில் அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதோடு இயேசு பிறப்பை குறிக்கும் வகையிலான குடிலும் அமைக்கப்பட்டுள்ளது. 






கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு முதலே ஏராளமான கிறிஸ்தவ மக்கள், குவிந்து, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.மேலும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.






தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால் வெளியூரில் இருக்கும் பலரும் சொந்த ஊருக்கு சென்று குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றனர்.






இப்படியான நிலையில் திரைப் பிரபலங்களும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நடிகைகள் சிம்ரன், பாவ்னி ரெட்டி, ஸ்மிருதி வெங்கட், ஆலியா பட், ராஷி கண்ணா, கியாரா அத்வானி, தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி, மிர்ணாளினி, சந்தானம். அபர்ணா தாஸ், அனன்யா பாண்டே, விஷால் என ஏராளமான பிரபலங்கள் கிறிஸ்துமஸ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இவை அனைத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது.