பிரபல நடிகை ராகுல் ப்ரீத் சிங் திருமணம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. 


2009 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கில்லி படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் ரகுல் ப்ரீத் சிங். இதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையறத் தாக்க படத்தில் சிறிய வேடத்தில் அவர் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.  இதனைத் தொடர்ந்து என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே , சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் உள்ளிட்ட சில படங்களில் ரகுல் பிரீத் சிங் நடித்திருந்தாலும்  ரசிகர்களிடம் பரீட்சையமான ஒருவராகவே உள்ளார். 


மேலும் தமிழ்,கன்னடம் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங் தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்து தங்களுடைய நேரத்தை செலவிட்ட நிலையில் 2020ஆம் ஆண்டு இது தொடர்பாக தகவல்கள் வெளியாக தொடங்கியது. இதன் பின்னர் ஓராண்டு கழித்து 2021 இல் ரகுல் பிரீத் சிங், ஜாக்கி பாக்னானி இருவரும் தங்களுடைய காதலை உறுதி செய்தனர்.






ஆனால் காதலித்ததை வெளிப்படையாக தெரிவித்த ரகுல் ப்ரீத் சிங்கிடம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து திருமணம் எப்போது? என்ற கேள்வி எழுப்பி வந்தனர். இப்படியான நிலையில் கோவாவில் கடற்கரை ஓரத்தில் உள்ள 5 ஸ்டார் நட்சத்திர விடுதி ஒன்றில் ராகுல் பிரீத் சிங் - ஜாக்கி பாக்னானி இருவரின் திருமணம் கோலாகலமாக நேற்று நடைபெற்றது.


திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஆனந்த் கராஜ் என்ற சீக்கிய முறைப்படி இவர்களின் திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அதேசமயம் திரையுலகை பொறுத்தவரை நடிகர்கள் அர்ஜுன் கபூர், வருண் தவான், ஷாஹித் கபூர், சோனம் கபூர், அக்ஷய் குமார், பூமி பெட்னேக்கர், ரித்தேஷ் தேஷ்முக், டைகர் ஷெராப் உள்ளிட்ட சில பிரபலங்கள் பங்கேற்றனர். 


ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த வரும் இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அது மட்டுமல்ல அவருடைய காதலரான ஜாக்கி பாக்னானி மியா ஃபோட்டோ மியான் என்ற படத்தில் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார் இந்த படத்தில் அக்ஷய் குமார் சோனா பிருத்திவிராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடம் என்று நடிக்க உள்ளனர்